பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் பகரும் செய்திகள் 239 பாரதியார்: பாவேந்தர் பாரதியாருக்குப் புகழ்மாலைகள் சூட்டியதுபோல் பிறர் எவரும் சூட்டியதில்லை. புதுச்சேரியில் வேணுநாய்க்கர் (வல்லூறு விட்டுத் திருமணத்தில் ஒருவரையொருவர் அறிமுகமானதிலிருந்து இருவர் நட்பும் குரு-சீடர் என்ற முறையில் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றியது. சுப்புரத்தினம் ஒரு கவிஞன், கவிதை இயற்ற வல்லவன்” என்று கவிஞரைத் தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தியதிலிருந்து இருவர் புகழும் எங்கும் பரவியது. இருவர் உறவும் டாக்டர் ஜான்சன்-பாஸ்வெல் உறவுபோல அமைந்தது என்று சொல்லி வைக்கலாம். ஏன்? நம்நாட்டு இதிகாச பாத்திரங்களாகிய துரோனர்-அருச்சுனன் உறவுபோல் அமைந்தது என்று கூறினும் மிகையாகாது.

யாதுமொன் றறியா என்னை

இவனலா தில்லையென் றிந்த மேதினி மதிக்கு மாறு

வின்முதல் படைகள் யாவும் தீதறத் தந்த உண்மைத்

தெய்வம் நீ” என்ற துரோணரை வாயார வாழ்த்துவான் பார்த்தன். “யாது மறியாதிருந்த என்னை இவனை வெல்லயார்க்கும் அரிது’ என உலகம் மதிக்குமாறு செய்த தெய்வம் தாங்கள்” எனக் கூறிப் புகழ்கின்றான். இதுபோல் பாவேந்தரும் தமது பாடல்களில் பாரதியாரைப் புகழ்வதைக் காணலாம்.

உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி’ என்று இரத்தினச் சுருக்கமாகக் கூறுபவர்,

திங்களைக் கண்ணிலான் சிறப்புறுத்தல்போல் பாரதிப் புலவனைப் பற்றிச் சிற்சில கூறுவேன்” என்று அவையடக்கம்” கூறித் தொடங்குவர். 13. வில்லி பாரதம்-நிரை மீட்சிச் சருக்கம்- 88 14. பாதா.க. தொகுதி-2, பக்கம் 7: 15. பாதா.க. தொகுதி-2, பக்கம் 71