பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபொருள் Y 11 இன்றைய அரசியல் எத்தர்களைப்போல் அன்றைய ஆரிய எத்தர்கள் தந்த பிணக்கேற் படுத்தும் கடவுளைக் கணக்குத் தீர்த்தல் மனிதர்தம் கடமையே” என்று கடவுளை நம்பும் மக்களைத் தெருட்டுகின்றார்.

2. சமயம்

பலவற்றையும் சேர்த்துக் கூறுங்கால்,

சாதிமத பேதங்கள் மூட வழக்கங்கள்

தாங்கிநடைபெற்றுவரும் சண்டை யுலகிதனை ஊதையினில் துரும்புபோல் அலக்கழிப்போம்; பின்னர்

ஒழித்திடுவோம்” என்று சமயத்தையும் கூறுவார்.

ஒருமதமும் வேண்டாம் - தம்பி உண்மையுடை யார்க்கே.

பெருமதங்கள் என்னும் - அந்தப் பேப்பிடிக்க வேண்டா.

திருட்டுக் குருமாரின் - கெட்ட செயலை ஒப்பவேண்டா

காணிக்கைகள் கொட்டி - நீ

கண்கலங்க வேண்டா.

தோணியில் ஏற்றி - நல்ல

சொர்க்கம் சேர்க்கமாட்டார்”

மூடத்தனத்தை முடுக்கும் மதத்தைநீர்

மூலப்படுத்தக் கைஓங்குவீர்” என்பனவும்,

14. நாள் மலர்கள் - பக்கம் 121 15. பாதா.க. முதல் தொகுதி-பக்கம் 146 16. பாதா.க. மூன்றாம் தொகுதி- பக்கம் 156 17. வேங்கையே எழுக- பக்கம் 35