பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபொருள் 13

தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச்

செறிந்த உலகின் வித்தே புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம்

புதுமை புதுமை! புதுமை!

அசைவைச் செய்தாய், ஆங்கே - ஒலியாம்

அலையைச் செய்தாய் நீயே! நசையால் காணும் வண்ணம் - நிலமும்

நான்காய் விரியச் செய்தாய்! பசையாம் பொருள்கள் செய்தாய் - இயலாம்

பைந்தமிழ்பேசச் செய்தாய்! அசையாம் தமிழைத் தந்தாய் - பறவை ஏந்திழை இனிமைக் குரலால்’ இவையும் வான் பற்றியவையே:

எண்ணங்கள் போல - விரி வெத்தனை கண்டாய் - இரு கண்ணைக் கவர்ந்திடும் ஆயிரம் வண்ணங்கள் கூடிச் சுடர்தரும் வான்!

வண்ணங்களைப் போய்க் - கரு மாமுகில் உண்டு - பின்பு

பண்ணும் முழக்கத்தை, மின்னலை, அம்முகில் பாய்ச்சின வானவில்லை.

வண்ணக் கலாப மயில் பண்ணிய கூத்தை - அங்கு

வெண்முத்து மல்லிகை கண்டு சிரித்தனள்! மேல்முத்தை வான்சொரிந்தான்!

விண்முத் தணிந்தாள் - அவள் மேனி சிலிர்த்தாள் - இதைக்

22. பாதா.க. தொகுதி-2 பக்கம் 33