பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபொருள் Y 31 (ஆ) பெண்ணுரிமை: இன்று பெண்கள்தாம் ஒவ்வொரு வீட்டையும் ஆள்கின்றார்கள். நாட்டையும் ஆள உரிமை வேண்டுகிறார்கள் போலும்!

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திரு நாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே.” தனித்துக் கிடந்திடும் லாயம் - அதில் தள்ளி அடைக்கப்படும் குதிரைக்கும் கனைத்திட உத்தர வுண்டு - வீட்டில் காரிகை நாணவும் அஞ்ச வேண்டும்” சொத்துரிமை, மறுமண உரிமை முதலியவற்றை நினைந்து கவிஞர் குரல் எழுப்புகின்றார் போலும்!

(இ) சமத்துவம்: “ஆண்-பெண் நிகர்” என்ற கருத்தும் பாடுபொருளாகின்றது.

ஆண்உயர் என்பதும் பெண்உயர் என்பதும் நீணிலத்து எங்கணும் இல்லை

நாணமும் அச்சமும் வேண்டும் - எனில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேண்டும்”

பெண்களிடம் கற்பை எதிர்பார்க்கும் ஆண்கள் பெண்களையே கற்பழித்துத் திரிய லாமா? பெண்களுக்கும் ஆண்களுக்கும் கற்பு பொதுவன்றோ?

காதல் உணர்வோ உயிரின் இயற்கை மாதர் மட்டும் சூளைக் கல்லோ?”

இவ்விடத்தில் பாரதியார் ‘புதுமைப் பெண்” பற்றிக் கூறியுள்ள கருத்துகள் ஒப்பு நோக்கத்தக்கவை.

66. பா.தா.க.முதல் தொகுதி - பக்கம் 3 67. பா.தா.க.முதல் தொகுதி - பக்கம்.116 68. இசையமுது - பகுதி 1-பக்கம் 52 69. காதல் பாடல்கள் - பக்கம் 161