பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு w பாவேந்தரின் பாட்டுத்திறன்

வடநாட்டார் போன்றஉடை வடநாட்டார் மெட்டு!

மாத்தமிழர் நடுவினிலே தெலுங்குகீர்த் தனங்கள்! வடமொழியில் கலோகங்கள்: ஆங்கிலப் பிரசங்கம்!

வாய்க்குவரா இந்துஸ்தான் ஆபாச நடனம்! அடையும்இவை அத்தனையும் கழித்துப் பார்த்தால் அத்திம்பேர் அம்மாமி எனுந்தமிழ்தான் மீதம்! கடவுளர்கள் அட்டைமுடி காகிதப்பூஞ் சோலை

கண்ணாடி முத்துவடம் கண்கொள்ளாக் காட்சி!

தொடக்கக் காலத்தில் அக்கிரகாரத் தமிழ் தலைதுாக்கி இருந்தது. இப்போது பாத்திரங்களுக்கேற்ப சில சமயம் “அக்கிரகாரத்தமிழ்” காணப்படுகிறது. இதைத் தவிர்க்க வேண்டியதில்லை.

புராணக் காலட்சேபம் கேட்டுப் பழகிப்போன காலத்தில் அது பிடிக்குமென்று அத்தகைய பாணியை சினிமாவிலும் பின்பற்றினர் போலும், கலை நுணுக்கம் சரிவர முதிர்ச்சியடையாதலால் படங்கள் சரிவர அமையவில்லை. கவிஞர் கூறுவார்:

பரமசிவன் அருள்புரிய வந்துவந்து போவார்!”

பதிவிரதைக் கின்னல்வரும் பழையபடி தீரும்! சிரமமொடு தாளமெண்ன்னிப் போட்டியிலே பாட்டுச்

சிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து வரும்காதல்! அவ்விதமே துன்பம்வரும் போகும்!

மகிரிஷிகள் கோயில்குளம் இவைகள் கதாசாரம் இரக்கமற்ற படமுதலாளிக் கெல்லாம் இதனால்

ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சியது லாபம்!

சினிமாத் துறையில் புகுந்து கவிஞர் வெற்றி காணாமல் போன மன முறிவு (Frustration) இறுதி இரண்டு அடிகளில் பிரதிபலிக்கின்றது!

எப்படிப்படம் எடுக்கும் திட்டம் செயற்பட வேண்டும் என்பதற்கும் யோசனை கூறுகின்றார் கவிஞர்.