பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பாவேந்தரின் பாட்டுத்திறன்

துவென்று சா திமதம் கான்று மிழ்ந்தால் அந்தநொடியே தமது மிடியறக்கும். அடுத்தநொடி திராவிடரின் கொடிபறக்கும்.”

(ஈ) உலக ஒற்றுமை: பரந்து விரிந்த உள்ளத்தையுடைய பாவேந்தருக்கு “உலக ஒற்றுமை கவிதைக்குரிய பொருளாய் அமைந்தது வியப்பில்லை. இதைப்பற்றிய அவருடைய கவிதை இது.

தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு

சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன் சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்

தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்! கன்னலடா என்சிற்றுர் என்போன் உள்ளம் கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம் தென்னை உள்ளம் ஒன்றுண்டு தனதுநாட்டுச்

சுதந்திரத்தால் பிறநாட்டைத் துன்புறுத்தல்: ஆயுதங்கள் பரிகரிப்பார், அமைதி காப்பார்,

அவரவர்தம் வீடுநகள் நாடு காக்க வாயடியும் கையடியும் வளரச் செய்வார்

மாம்பிஞ்சின் உள்ளத்தின் பயனும் கண்டோம்! துயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்

தொல்லுலக மக்களெல்லாம்"ஒன்றே” என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! அங்கே

சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே” உள்ளத்தின் சிறுமையை கடுகுள்ளம், துவரையுள்ளம், தென்னையுள்ளம், மாம்பிஞ்சு உள்ளம் என்று எடுத்துக்காட்டி பரந்து விரிந்த தாயுள்ளத்தை பெரிதாக்கிக் காட்டி விளக்குவது அற்புதம்!

(உ) தொழில்:தொழிலைப்பாடுபொருளாகக்கொண்டகவிதை.இது

தொழிலே வாழிநீ! தொழிலே வாழிநீ! எழிலை உலகம் தழுவும் வண்ணம் ஒழியா வளர்ச்சியில் உயரும் பல்வகைத் தொழிலே வாழிநீ தொழிலே வாழிநீ!

88. வேங்கையே எழுக பக்கம் 36 89. பாதா.க. முதல் தொகுதி. பக்கம் 131