பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பாவேந்தரின் பாட்டுத்திறன் அல்லற் கஞ்சோம் கடுமொழி சொல்வதற் கஞ்சோம் ஒருசிறை செல்லற் கஞ்சோம், அஞ்சோம்! தூக்குக் கஞ்சோம் இல்லுக் கோர்தமிழ் மறவன் ஈட்டுக்கோர் நாட்டுப்பெண் தொல்லைதரும் இந்தியினைக் கொல்லோமே முரசே!” என்ற பாடலிலும், புலைஎழுப்பும் இந்திதாயின் தலையில் ஒன்றுபோடு - நல் புதுவாழ்வைப் பழநாட்டில் விடுதலையால் தேடு!” என்ற பாடலிலும், முத்தாய்ப்பாக, அரிமா உலவும் காட்டினிலே ஆரியம்போல் வாழ்கின்ற தரிமா வுக்கும் இடமுண்டு மறுக்கவில்லைநாம், ஆனால் அரிமா இடத்தில் நரிமாக்கள் அட்ட காசம் செய்வதுமா? சரிப்படாது தமிழர்களே சாய்ப்பீர் இந்தி நரித்தனத்தை’ என்ற பாடலிலும் அனல் தெறிக்கும் சொற்கள் பயின்று வருவதைக் காணலாம். இப்படிப் பல இடங்கள்! காதல் உணர்வு கொப்பளிக்கும் அன்புத் தமிழில் குழையும் தமிழ்ச் சொற்கள் கொஞ்சி வருவதைக் காணலாம். அவளின் அழகு! வஞ்சிக்கொடிபோலஇடை அஞ்சத்தகு மாறுளது 11. வேங்கையே எழுக! பக்கம் 78 12. வேங்கையே எழுக! - பக்கம் 85 13. வேங்கையே எழுக! - பக்கம் 105