பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பாவேந்தரின் பாட்டுத்திறன்

என்ற பாடல்களை இசையுடன் படித்தால் அவை தமிழர்களிடையே வீர உணர்ச்சியை எழுப்புவதை அறியலாம்.

தமிழர்தலம் காப்பதற்கு நீதிக் கட்சி

தமிழ்நாட்டில் தோற்றுவித்த அறிஞர்க் குப்பின் சமர்விளைக்கத் தலைவனின்றி யிருந்த காலை

தனித்துவந்தோன் தமிழர்பிரான் இராம சாமி “தமரங்காள் அஞ்சாதீர்” என்றெழுந்தான்!

தன்றெனவே உடனெழுந்தான் பன்னிர் செல்வன் தமிழர்பிரான் தன்னருமைப் படைத்த லைவன்

தனையிழந்தால் சலியாதோ சலியா உள்ளம்’ சர். பன்னீர் செல்வன் மறைவைக் குறித்த இப்பாடலை இசையுடன் பாடும்போது இரக்கவுணர்வும், சோகவுணர்வும் படிப்போரிடையேயும், செவிமடுப்போரிடையேயும் எழுவதை அறியலாம். உயர்ந்த உணர்ச்சி நிலையின்பொழுது கவிஞர்களுக்குத் தாமாகவே தக்க சொற்கள் வந்து அமைந்து ஏற்ற பொருளையும், ஒலியையும் பயந்து நிற்கும். வெகுளி, இரக்கம், பெருமிதம், முதலான உணர்ச்சிகளுக் கேற்றவாறு சொற்கள் அமைந்து அவையே கவிதைகளைக் கற்பவரின் மனத்திலும் அதே உணர்ச்சிகளை எழுப்ப வல்லனவாக விளங்கும். அவை அந்தந்த உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு வன்மை, மென்மை ஒலிகளையும் பெற்றுக் கற்போரின் உணர்ச்சிகளைத் தூண்ட வல்லனவாக அமையும்.

சொல்வோன் குறிப்பால் பெறுவது: சொற்கள் பொருளை என்னதான் தெரிவித்தபோதிலும் மனத்திலுள்ள கருத்துகள் யாவும் சொற்களில் அடங்கிவிடும் எனக் கூறுதல் இயலாது. ஆனால், கவிதையில் பயின்று வரும் சொற்கள் பொருட்செறிவு மிக்கவை. காரணம், அவை ஏற்கெனவே பல கவிதைகளில் பயன்படுத்தப் பெற்றுள்ளமையின் கற்பனைச் செறிவும், பொருள்வளமும் உடையனவாக உள்ளன. சொற்கள் பொருளை நேரடியாகவும், மறைமுகமாகவும் தெரிவிக்கின்றன. பழக்கத்திலுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் இத்தன்மை உண்டு. இதன் அளவையும் ஒரளவு 24. புகழ்மலர்கள். பக்கம் 72