பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்வளம் Y 73

அறுதியிட்டு விடலாம். நாடோறும் நாம் வழங்கி வரும் சொற்கள் கூட இவ்வாற்றலைப் பெற்று விடுகின்றன.

அவன்-அவள்; ஆண்-பெண் இணைந்து செயற்படுவதே காதலின் அடிப்படை அகப்பொருள் தத்துவம். இந்த ஒன்றிப்பின் வலிமையை இணைப்பின் தன்மையை-பாவேந்தர் பல்வேறு விதமாக எடுத்துக் கூறுவார். எடுத்துக்காட்டுகளாக இரண்டு இடங்களைக் குறிப்பிடலாம்."அவள் கொண்ட ஆமைகள்” என்ற தலைப்பில் வருவது:

கொஞ்சாமை ஒன்று மகிழாமை

ஒன்று குளிர்தமிழால் கெஞ்சாமை ஒன்று கிடவாமை ஒன்று கிளைஞர்தமக்கு அஞ்சாமை ஒன்றாசை ஆற்றாமை

ஒன்றதன் மேலுமின்றே துஞ்சாமை பாடையில் தூக்காமை

உண்டு துடியிடைக்கே’ “அவை கொண்ட ஆமைகள்” என்ற தலைப்பில் வருவது:

பாராமை ஒன்று பகராமை

ஒன்றுகைப் பற்றிஎனைச் சேராமை ஒன்று சிறவாமை வாழ்விற் சிறப்பளிக்க வாராமை ஒன்று மகிழாமை

ஒன்று வரவிடுத்தாய் ஒராமை யேபொறேன் ஆறாமை யேற்றினை ஒண்டொடியே!”

“ஆமை, ஒருமையில் ஐந்தடக்கும்” (குறள் - 126), இஃது அடக்கத்திற்கு எடுத்துக்காட்டாக வந்தது; வள்ளுவர் காட்டியது. ஈண்டு பாவேந்தர் பல ‘ஆமைகளை” இரண்டு பாடல்களில் அடக்கிக் காதலுணர்வின் பரிணாமத்தை-விளங்கக் காட்டுவர்."காதலுணர்வை ஒரளவு அடக்கிக்கொண்டு தாக்குப் பிடிப்பவள் பெண்; அடக்க

25. காதல் பாடல்கள் பக்கம் 47 26. காதல் பாடல்கள் - பக்கம் 48