பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பாவேந்தரின் பாட்டுத்திறன்

முடியாமல் தவிப்பவன் ஆண்” என்ற குறிப்பையும் இரண்டு பாடல்களையும் தலைவன் கூற்றாகவே அமைத்துக் காட்டுவது அற்புதம்,

கவிதை மதிப்புடைய சொற்கள்: கவிதையில் பயின்று வரும் சொற்களைத் தனித் தனியாக எடுத்துப்பார்க்கும்பொழுது, அவைதரும் பொருள் வேறு; அவை ஏனைய சொற்களுடன் உறவு கொண்டு மனத்தில் படும்பொழுது தரும் பொருள் வேறு. எனவே, கவிதையின் முழுக் கருத்தையும் உளங்கொள்ளாமல் சொற்பொருளை மட்டிலும் ஆராய்தல் பெருந்தவறு. கவிதையில் பயின்று வரும் சொற்களுக்கென்று தனி ஒசையும் இல்லை; பொருளும் இல்லை. பல சொற்கள் கவிதையில் உறவு கொள்ளும்பொழுதுதான் அவை பொருட் சிறப்பைப் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக “தேன்”, “பால்” என்ற சொற்கள் நாம் அறிந்தவையே. அகர முதலியிலும் இவற்றிற்குப் பொருள் எழுதப்பெற்றிருக்கும். ஆனால், கவிஞன் ஒருவன் இவற்றைத் தன் கவிதையில் கையாளும்பொழுது அவை தமக்கே உரிய பொருளையும் அதற்குமேல் மத்தாப்புபோல் வேறுபொருள் ஒளியையும் பொரிந்து காட்டும்.

உண்டாலே தேன் மலரின்தேன் - இவள் கண்டாலே தித்திக்கும் தேன்!

வண்டால்கெடாததேன் வையம் காணாததேன் மொண்டால்குறையாததேன்-நான் மொய்த்தேன் பேராசை வைத்தேன்!”

காதலனுக்குக்காதலியான தேன்,பார்க்கும்போதே இனிக்கின்றதாம். “அடுநறா உண்டார்க்கு மகிழ்ச்சி தரும்; காமம் என்ற நறவு கண்டார்க்கு மகிழ்ச்சி தரும்” என்ற வள்ளுவர் கருத்தும் ஈண்டு நினைத்தல் தகும். (குறள் - 1090).

27. காதல் பாடல்கள் பக்கம் 39