பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 என்தந்தையார் கண்ணாடியைக் கையில் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பார்ப்பார், என் தந்தையார் ஒரு கறவை மாட்டைப் போன்றவர். கறவை மாட்டை எவ்வளவுக்கெவ்வளவு கவனமாகப் பேணுகின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக அது பால் கொடுக்கும். "அப்பாவிடம் கல்வியும் செல்வமும் சேர்ந்திருக்கிறது. அவரை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்று என் தம்பியிடமும், தங்கைகளிடமும் நான் அடிக்கடி கூறுவதுண்டு. அவரைச் சரியாக கவனிக்கவில்லையென்றால் எழுதமாட்டார்.