பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 179 தன் இளமைப்பருவ நண்பர்களைக் கண்டாலே கவிஞருக்கு எப்போதும் அளவிலா மகிழ்ச்சி. புதுவையில் நீண்ட காலத்துக்கு முன் வேலை நிமித்தமாகப் பிரிந்து விட்ட அரங்கநாதனை மீண்டும் நெட்டப்பாக்கம் சிற்றுாரில் சந்தித்தபோது துள்ளிக் குதித்தார் கவிஞர். அரங்கநாதன் இளைஞராக இருந்தபோது நாடகங்களில் அனுமன் வேடம் ஏற்பது வழக்கம். அதனால் குரங்கு ரங்கநாதன் என்று நண்பர்களால் அவர் அன்புடன் அழைக்கப்பட்டார். இவ்வடைமொழிக்கு வேறு ஒரு காரணமும் உண்டு. கவிஞர் தம் குழாத்துடன் சிறுவயதில் செய்த துடுக்குத் தனங்களில் இந்த அரங்கநாதனுக்கும் முக்கியப் பங்குண்டு. நெட்டப்பாக்கத்தில் வருவாய்த் துறையைச் சார்ந்த கணக்குப் பிள்ளையாக அரங்கநாதன் வேலைபார்க்கும் சமயம், தமிழாசிரியராக வந்து சேர்ந்தார் கவிஞர். நாங்கள் அரங்கநாதனை மாமா என்றும், அவரின் துணைவியாரை அத்தை என்றும் அன்புடன் அழைப்போம். அந்த அம்மையாரின் பெயரும் சுப்புரத்தினம். மிக நெருக்கமாக அவர்களோடு எங்கள் குடும்பம் பழகிக் கொண்டிருந்தது. மாலைவேளையில், அரங்கநாதன் வீட்டுத் திண்ணையில் அரசு அலுவலர் உட்படக் கவிஞர் குழாம் சீட்டு ஆடுவது வழக்கம். புள்ளி ஒன்றுக்கு ஒரு தம்பிடி, கவிஞர் நன்றாகவே சீட்டு ஆடுவார்; தம்பிடிக் காசாகவே ஒரு சிறு மூட்டை கட்டிக் கொண்டு வீடு வந்து சேருவார். ஒரு விடுமுறைநாள் - எல்லாரும் பிற்பகலிலேயே கூடிவிட்டார்கள். மாலை மயங்கிப் பொழுது இருட்டத் தொடங்கிய நேரம். சுறுசுறுப்பாகச் சீட்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. "ஐயோ! என்று குரல் எழுப்பி, மேலே எழும்பிக் குதித்தார் அரங்காநதன். அங்க பாரு.. சுப்பு பா.பா..!" என்று குழறினார். அவர் வாயிலிருந்து சொற்களே வெளிவரவில்லை. கவிஞர் திண்ணையிலிருந்து எட்டி உயரப் பார்த்தார். திண்ணையோரத்தில் சாய்ந்திருந்த பூவரச மரக்கிளையில் பச்சைப்பாம்பு ஒன்று நழுவிக் கொண்டிருந்தது. பச்சைப்பாம்பைக் கண்டு அச்சமேலிட்டால், எழும்பிக் குதித்த அரங்கநாதனை நோக்கிக் கவிஞர் 'அந்தக்கால நாடகத்திலே கடலைத் தாண்டிக் குதிக்கறதா பச்சையா புளுகிப் பாடுவ இப்ப, பச்சைப் பாம்பைப் பார்த்துட்டு, எம்பிக் குதிக்கிறியே... சரியான அனுமாரப்பா நீ!" என்று சொல்லிவிட்டுக் கலகல என்று நகைத்தார். அரங்கநாதனுக்குப் பழைய நினைவுகள் பளிச்சிட்டன. "கணக்குப்