பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 229 விளம்பரப்படுத்திக் கொண்டாலும் சிலரை மக்களுக்குத் தெரியாது. பாவேந்தரின் நடையழகும் உடலழகும் போட்டி போடும். இந்த இரண்டு பாவலர்கள் மீதும் எனக்கு அளப்பரிய காதல். இந்தக் காதலுக்கு ஒருத்திக்கு ஒருவன் என்ற வரையறை இல்லை. சில பாட்டிக் கதைகளில், இளவரசி ஏதாவது ஒர் இளவரசனின் வில், வாள் திறமையைக் கேட்ட அளவிலேயே காதல் கொண்டு விடுவதுண்டு. அதேபோன்று பாவேந்தரின் பாடல்களை இளமையிலேயே படித்துப் படித்துக் காதல் அரும்பக் கூடாத பருவத்திலேயே எனக்கு அரும்பிவிட்டது. 1952ஆம் ஆண்டு பாவேந்தர் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்’ நிறுவனத்துக்காகத் திரைப்பட உரையாடல் எழுத வந்து தங்கியிருந்தார். மார்டன் கேஃப்" என்ற விடுதியில் தங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டு நானும் சில நண்பர்களும் அவரைக் காணச் சென்றோம். நாங்கள் அவர் தங்கிருந்த அறையை நெருங்கிக் கொண்டிருந்தோம். உண்மையிலேயே பாசுவல் (Boswell) என்பவர் சாமுவேல் சான்சன் (Samuel Johnson) என்ற அறிஞரைப் பார்க்க எதிர்பார்த்துக் கொண்டு டேவிசு (Davies) என்பவருடன் இருந்தபொழுது அவர் மனநிலை எப்படியிருந்ததோ அப்படியே இருந்தது எனக்கும்! சான்சன், இவர்கள் இருந்த இடத்தை நோக்கி வருவதைப் பார்த்து டேவிசு... ஆம்லத் நாடகத்தில் ஒரேசியோ (Horatio) ஆம்லத்தின் தந்தையுடைய ஆவியை அவனுக்குச் சுட்டிக் காட்டிக் கூறுவதுபோல்'Look.mylord, itcomes என்று நாடக முறையில் கூறியதாகக் கூறுவதுண்டு. அதேபோன்று நாங்கள் அவருடைய அறையை நெருங்கும்போது திடுமென வெளிப்பட்டார்; எங்கோ வெளியில் புறப்பட்டு விட்டார். டேவிசு கூறியதைப்போல் என் நண்பர், அதோ... அதே தான்!” என்றார். என் நண்பர் இப்படிக் கூறியது எனக்குத் தூக்கி வாரிப் போட்டது! அவர் விளக்கஞ் சொன்னார். "எல்லாப் புலவர்களுமே கிறுக்குப் பிடித்தவர்கள்தாம்! ஆங்கிலப் புலவனும் இதற்கு விதி விலக்கல்லன்! போப் என்ற புலவரைப் பற்றிப் போலிங்புரூக் என்ற அம்மையார் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? "அவர் சில வேலைகளில் அமைதியே உருவாக இருப்பார்; வேறுசில Gaugbarðaféo & Gogul irrit” (Some times he is polite and some times barks like a dog). "அப்படியானால் பாரதிதாசனும் நாம் போய்ப் பார்த்தால் எரிந்து விழுவாரா?-இது என் ஐயவினா.