பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் 231 படித்திருப்பாரோ? அந்தப் பாடலை மீண்டும் நினைவுக்குக்' கொண்டு வந்தேன். தான் பெற்ற குழந்தையின் முகத்தை எத்தனைமுறை பார்த்தாலும் தாய்க்குச் சலிப்பதில்லை! அப்படித்தானே பாவலனுக்கும்? ஒலையெனும் கூந்தலினை விரித்துவிட்டே உலர்த்துகிற தென்னையெனும் பெண்ணே நீதான் காலையிலே குளித்தெழுந்து நிற்கின்றாயோ? கன்னியர்கள் சிலபேர்கள் நாகரீகச் சேலையெனும் பெயராலே அங்க மெல்லாம் தெரிகின்ற மெல்லாடை உடுத்தல் கண்டோ சோலையிலே வெட்கமின்றி பன்னா டையைச் சுற்றிக்கொண்டிருக்கின்றாய்! நாண மில்லை? என் நினைவிலே இப்பாடல் வரிவரியாக வந்து கொண்டிருந்ததைப் படித்துச் சுவைத்துக் கொண்டு (என்முதுகில் நானே தட்டிக் கொண்டு) இருந்தபோது பொன்னடியான் உள்ளே வாருங்கள் என்றார். 'உள்ளே போகச் சொன்னாலே சிலபேருக்கு வரும் நடுக்கத்தை நான் நன்கு உணர்ந்தேன். பாவேந்தர் அமர்ந்திருந்தார்! அவரைப் பார்த்தேன்! ஆமாம் பார்த்தேவிட்டேன்! சான்சனை நேரில் முதல் முதல் பார்த்ததைப் பற்றிப் பாசுவெல், "பூதத்தை அதன் குகையிலே பார்த்தேன்!” ( found the giant in his den) என்று இவருக்கு முன்னரே மறைத்திரு பிளேயர் கூறிய அதே சொற்களைக் கூறினார்! அதே போன்று தான் நானும் கூறுகிறேன். அவரைப் பார்த்தேன்! அடுத்து அவருடைய மிசைப் பலகையைப் பார்த்தேன்! மருந்து-மாத்திரைகள்; வெண்சுருட்டுகள்; மூக்குக் கண்ணாடி; தூவல்; பொடிப்பேழை மற்றும் பல. பாவேந்தரே உரையாடலைத் தொடங்குகிறார்: 'தம்பி? நீ எங்கிருந்து வருகிறாய்?..." "நான் தருமபுரி மாவட்டத்திலிருந்து” “தருமபுரியா? நான் வந்திருக்கிறேன்... உட்கார்". நான் தயங்கிக் கொண்டே அமர்கிறேன். "பொன்னடி சொன்னான், உன் பெயர் மணிவேலன் என்று! நீ எழுதிய 'தென்னைப்பெண்ணே என்ற பாடலைப் படித்தேன். அப்படித்தான் எழுத வேண்டும். இப்பொழுது நிறையபேர் கவிதை எழுதுகிறார்கள். முன்பெல்லாம் எல்லோரும் கடவுளைப் பற்றியே