பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 நினைத்தாலே இனிக்கும் நாட்கள் எஸ். முருகேசன் இக்கட்டுரையாசிரியர் திரு. எஸ். முருகேசன் தரும புரியைச் சேர்ந்தவர்; சட்டமன்றத் தலைவர் மாண்பு மிகு க. இராசாராம் அவர்களின் நெருங்கிய உறவினர்; இசையறிவும் நடிப்பாற்றலும் மிக்கவர்; பாவேந்தர் எழுதிய கவிகாளமேகத்திலும் நடித்தவர். பாவேந்த ரோடு பழகிய நாட்களில் இவர் கட்டிளங்காளை, கொள்கை வெறியோடு கூவித்திரிந்த இசைக்குயிலான பாவேந்தரைப் பற்றிய தம் இளைய நினைவுகளைச் சுவைப்பட இக்கட்டுரையில் கூறுகிறார். பாவேந்தருக்கும் எனக்கும் முதல் சந்திப்பு 1938ஆம் ஆண்டு ஏற்பட்டது. 'கவிகாளமேகம்' என்ற திரைப்படம் எடுப்பதற்குச் சேலம் மோகினி பிக்சர்ஸ் நிறுவனத்தார் முயற்சி செய்து கொண்டிருந்த நேரம். இளமையில் நான் இசையிலும், நாடகத்திலும் ஈடுபாடு மிக்கவனாக இருந்த காரணத்தாலும், படக் கம்பெனியின் பங்குதாரர்கள் என் குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர்களாக இருந்த காரணத்தாலும், எனக்கிருந்த எடுப்பான தோற்றத்தாலும் அப்படத்தில் அரசனாக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கவி காளமேகம் படப்பிடிப்பின்போது பாவேந்தரோடு ஏற்பட்ட நெருக்கமான பழக்கம் பின்னும் தொடர்ந்தது. பாவேந்தரை நான் முதன் முதலில் சந்தித்தபோது மாந்தோப்பில் மணம் என்ற பாடலை இசையோடு பாடிக் காட்டினேன்; அவர்