பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 அவள்மேல்பழி அடுத்த நாள் பாவேந்தர் தனியாகவே சிவாஜியின் வீட்டுக்குச் சென்றார். சிவாஜி அவரைப் பார்த்து, "வசனம் பாட்டு எல்லாம் நீங்களே எழுதுங்கள். மற்றபடி டைரக்ஷன், இசையமைப்பு, ஒளிப்பதிவு ஆகியவற்றுக்கெல்லாம் நான் சொல்லுபவர்களைத்தான் போடவேண்டும்” என்று கூறினாராம். பாவேந்தர் ஏன்? என்று கேட்டிருக்கிறார். "எல்லாருமே என்னிடத்தில் இருக்கிறார்கள். வேறு டைரக்டர் களைப் போட்டால் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதன்படி என்னை நடிக்கச் சொல்லுவார்கள். ஆனால் நான் எப்படி நடிக்கிறேனோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் டைரக்டர் தான் எனக்கு வேண்டும். ஆகையால் பீம்சிங்கைப் போடுங்கள்!" என்று சிவாஜி சொன்னா சரி பார்க்கலாம் என்று சொல்லி விட்டுப் பாவேந்தர் எழுந்து வந்து விட்டார். அன்றைக்கு அவர் திரும்பியபோது அவர் நல்ல மனநிலையில் இல்லை. வழக்கத்துக்குச் சற்று அதிகமாகவே மதுவருந்தினார். அவன் என்ன பெரிய நடிக...! அவன் நடிக்காட்டி என்ன? என்று வருத்தத்தோடும் கோபத்தோடும் பேசினார். நானும் முருகதாசாவும் அவரைச் சமாதானப்படுத்தி பீம்சிங்கையே டைரக்டராகப் போடும்படி சொன்னோம். அவரும் ஒப்புக் கொண்டார். பீம்சிங் அப்போது சுறுசுறுப்பான டைரக்டர்களுள் ஒருவர். அப்போது விடிவெள்ளி என்ற படத்தை இயக்கும் வேலையில் மும்முரமாக மூழ்கியிருந்தார். அப்போது அவரைத் தேடிப்பிடிப்பதே மிகவும் சிரமமாக இருந்தது. ஒருநாள் பாவேந்தர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பீம்சிங்கை வரும்படி சொன்னார்: அவரும் வந்தார். பாண்டியன் பரிசைக் கொடுத்து அதற்கு ட்ரீட்மெண்ட் எழுதிக் கொண்டுவரும்படி சொன்னார். பேச்சுவாக்கில் "ஆமா, நீ எத்தனாவது படிச்சிருக்கே?' என்று பீம்சிங்கைக் கேட்டார். நான் தமிழே படிக்கல. பூனாவிலே படிச்சேன் என்று பீம்சிங் சொன்னார். கொஞ்ச நாளில் பாரதிதாசன் பிக்சர்ஸ் என்ற பெயரில் முதலமைச்சர் காமராசர் பாவேந்தரின் படக்கம்பெனியைத் துவக்கி வைத்தார். பாண்டியன் பரிசுக்கும் எனக்கும் ஏற்பட்ட தொடர்பு இவ்வளவுதான். பிறகு சென்னை செல்லும்போது பாவேந்தரைச் சந்தித்து பேசிவிட்டு வருவது வழக்கம். பாவேந்தரோடு பழகியவர்களுக்கு அவருடைய உணவுப் பழக்கங் கள் நன்றாக நினைவிருக்கும். அவர் சேலத்தில் தங்கியிருந்தபோது அடிக்கடி மீன் கேட்பார். செவ்வாய்ப் பேட்டைச் சந்தையிலும்,