பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 தேனருவி வண்டிக்கார பாட்டைக் கேட்டிருக்கணும்... ஊம்” என்று சலித்துக் கொண்டார். 'அபூர்வ சிந்தாமணி’ என்ற படத்துக்குப் பாவேந்தர் வசனம் எழுதியிருந்தார். அப்படத்துக்கு வெளிப்புறக் காட்சிகளை எடுப்பதற்காக நடிகர்குழு ஏர்க்காடு மலையடிவாரத்துக்குச் சென்று கொண்டிருந்தது; பாவேந்தரும் உடன்வந்து கொண்டிருந்தார். அவர் ஏறிச் சென்ற காரின் குறுக்கே ஒரு வாத்துக் கூட்டம் சரேலென்று வந்தது. காரோட்டி எவ்வளவு முயன்றும் வண்டியை நிறுத்த முடியவில்லை. ஏழெட்டு வாத்துகள் வண்டியில் அடிபட்டு இறந்து விட்டன. உடனே பாவேந்தர் அங்கிருந்தவர்களிடம், செத்துப்போன வாத்துக்கெல்லாம் சுந்தரத்தைப் பணம் கொடுக்கச் சொல்லு' என்று சொல்லிவிட்டு அவ்வாத்துக்களைச் சேலத்தில் அப்போது குடியிருந்த நகைச்சுவை நடிகை பி.எஸ். ஞானத்தின் வீட்டுக்கு அனுப்பி சமைக்கச் சொன்னார்; இரண்டு நாள் சுவைத்துச் சாப்பிட்டார். கோவையில் தமிழ்த் தேசியக்கட்சி மாநாடு நடைபெற்றது. அதில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதனும், பாவேந்தரும், நானும் கலந்து கொண்டோம். நடுப்பகல் உணவு கோவை அறிஞர் ஜி.டி. நாயுடு இல்லத்தில் ஏற்பாடாகி இருந்தது. இலையில் உணவு பரிமாறப்பட்டது. ஜி.டி. நாயுடு சைவ உணவுக்காரர் ஆயிற்றே. இலையில் உப்பு, பருப்பு, சோறு, நெய், புடலங்காய் பரிமாறப்பட்டிருந்தன. அந்த சாப்பாட்டைப் பார்த்தவுடனே பாவேந்தருக்கு ஒர் அலெர்ஜி-ஜி.டி. நாயுடு அருகில் நின்று கொண்டிருந்தார். பாவேந்தர் அவரைக் கூப்பிட்டு, “ஏப்பா நாயுடு! இதைச் சாப்பிட்டுத்தா உயிரோட இருக்கறயா?" என்று கேட்டார். நாயுடு சிரித்தார். பிறகு அருகில் உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்து "கண்ணதாசா! எந்திரி! நமக்கு இதெல்லாம் ஒத்து வராது” என்று சொன்னார். நானும் பாவேந்தரும் பெங்களுர் பிரியாணி ஒட்டலுக்குச் சென்றோம். பாவேந்தர் மாரடைப்பால் தாக்கப்பட்டுச் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகச் செய்தி கிடைத்தது. சென்னை அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். தமிழ்மலை கட்டிலில் சாய்ந்து கிடந்தது. மூக்கின் வாயிலாகப் பிராணவாயு செலுத்தப்பட்டிருந்தது. கொஞ்சம் நினைவு வந்ததும் எழுந்து உட்கார்ந்தார். மாரடைப்பால் தாக்கப்பட்டவர் படுக்கையில் கூட அசையாமல் கிடக்க வேண்டும். ஆனால் பாவேந்தர் எழுந்து உட்கார்ந்தார். பாத்ரும் போகணும் என்றார்.