பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 297 ஈடுபட்ட தமிழ்நாட்டுப் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்பெண்களில் சரசும் ஒருத்தி. திருமணத்துக்கு முன்பு தாலி செய்வதைப் பற்றிப் பேச்சு எழுந்தது. உடனே சரசு என்னைப் பார்த்து, “ஏன் அத்தை! நான் என்ன மாடா? முனிசிபாலிடியில் கட்டுவதுபோல் எனக்கும் லைசென்ஸா கட்டப் போறாங்க?" என்று கேட்டாள். நான் வியப்பினால் விக்கித்துப் போனேன். தமிழ்நாட்டின் புரட்சிக்கவிஞனுக்கு ஏற்ற புரட்சிப் பெண்தான் இவள் என்று நான் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். உடனே நாங்களே அதற்கு ஒரு முடிவு கண்டோம். தமிழரின் சின்னமான புலிவில்கயல் பொறித்த பதக்கமொன்று தாலிக்குப் பதிலாகத் திருமணத்தின்போது அணிவிக்கப்பட்டது. அவர்கள் குடும்பத்தில் எல்லாத் திருமணத்திலும் அப்பழக்கம் இன்றும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்த பிறகு மணமக்கள் இருவரும் கானாடு காத்தான் வந்து சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு மகிழ்ச்சியோடு திரும்பினர். சரசுவதியின் திருமணத்துக்குப் பிறகு ஒரிரு ஆண்டுகளில் எங்கள் குடும்பத்தில் சில குழப்பங்கள் நிகழ்ந்தன. மலேயாவில் நடந்து கொண்டிருந்த எங்கள் வாணிபம் சீர்குலைந்தது. அங்கிருந்த சொத்துகள் சம்பந்தமான வழக்குகளில் வை.சு.ச. ஓயாமல் ஈடுபட்டிருந்தார். 10 லட்சம் ரூபாய் அளவுக்கு வரவேண்டிய செல்வம் வழக்கின் காரணமாகத் தடைபட்டுக் கிடந்தது. வை.சு.ச. அமைதியிழந்தார். அடிக்கடி சீற்றத்துக்கு ஆளானார். அவர் கடைப்பிடித்து வந்த சீர்திருத்தக் கருத்துகளும் ஆட்டம் கண்டன. பகுத்தறிவுவாதிகள் தங்கியிருந்த இன்ப நிலையம் சாமியார்களுக்கு இடம் கொடுத்தது. சாமியார்களுக்கு ஏற்பச் சமைக்கும்படி என்னை என் கணவர் வற்புறுத்தியதால் நான் அவர்பால் கருத்து வேறுபாடு கொண்டு புதுவைக்குச் சென்றேன். பாவேந்தர் அப்போது சென்னைக்குக் கதையெழுதப் போயிருந்தார். என் கணவர் புதுவைக்குக் கடிதம் மேல் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். குழந்தைகளுக்கு அம்மை கண்டிருக்கிறது என்று அவரிடமிருந்து கடிதம் வந்ததும் நான் கானாடு காத்தான் திரும்பி விட்டேன். பிறகு எங்கள் குடும்பம் கானாடு காத்தானிலிருந்து குடிபெயர்ந்து திருவானைக்காவலில் கொஞ்ச நாள் தங்கியது. அப்போது பாவேந்தர் குடும்பத்தோடு வந்திருந்து எங்களுடன் தங்கியிருந்தார். கண்ணப்பரும் சரசுவதியும் வந்திருந்தனர். அந்தச் சமயத்தில்தான் பாவேந்தருக்குத் திருச்சியில் மணிவிழா எடுக்கும் முயற்சி