பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 331 தந்தை பெரியார் அவர்களின் புராண இதிகாச எதிர்ப்புக் கொள்கைகளில் பற்றுக் கொண்டிருந்த என் தோழர்களால் அதனை ஏற்க முடியவில்லை. அடுத்த சில நாட்களில் அங்கு வருகை தந்த பாவேந்தர் அவர்களிடம் நானும் சில தோழர்களுமாக இந்த நிகழ்ச்சியை எடுத்துச் சொன்னோம். முதல் கட்டத்தில் பலே, பலே என்றார். அப்படித்தான், சரி சரி: என்றெல்லாம் கூறிவந்தார். நம்ம பிள்ளைகள் நல்லாத்தான் முழங்கி இருக்கிறார்கள் என்றார். அதன்பின் இவ்வாறு கூறினார்: "அடிகள் பெரிய அறிஞர், ஏராளமாகப் படித்தவர். ஆராய்ச்சியாளர், என்றாலும் அவர் சைவர். அவருடைய சமயத்தைக் குறை சொன்னால், அவரால் பொறுக்க முடியவில்லை. என்றாலும் சைவத்தின் தொன்மையைக் கொண்டு அது தென்னாட்டவர் (தமிழர்) சமயம் என்று நம்புகிறார். தமிழர்களிடம் தோன்றித் தனித்து நின்ற சமயம்?ஆரியத்தால் வந்ததன்று என்பதற்காகஎன்பதால் நாமும் மதிக்கலாம். ஆனால் ஏற்க முடியாது. எவ்வளவு பெரிய அறிஞர் ஆயினும்-மத நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் பின்னர் தெளிவு ஏற்படாது. "என்றாலும்-அவரை மதித்து- பெரிய புராணம் ஒழிக’ என்பதை அன்று நிறுத்திவிட்டீர்களா? அதுவும் சரியே! அவர் நம்மவர் நம்மவர்க்காக தமிழர்கட்காக வாதாடுபவர்-அதற்காக அவருக்கு மரியாதை கொடுக்கலாம்! அவரது தமிழ்த் தொண்டு பெரிது! நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும். என்னும் குறள் விளக்கும் அறிவே-மறைமலை அடிகளாரின் பற்று போன்ற நிலையைத்தான்” என்றார் பாவேந்தர். வழக்கமாகக் கிளர்ச்சியை விரும்பும் பாவேந்தர் அன்று வழக்கத் திற்கு மாறாக, அடிகளாரிடம் அவர் கொண்டிருந்த மதிப்பால்கடுமை காட்டாது பொறுமை காட்டினார் எனல் வேண்டும். ஒருமுறை அவர் சிதம்பரம் வந்தபோது, பல்கலைக்கழகப் புலவர் வகுப்பு மாணவர்களான, புலவர் நா.மு. மாணிக்கம், புலவர் அரங்கசாமி, தம்பி புலவர் திருமாறன்-முதலானோருடன் அவரைக் கண்டு உரையாடினோம். தமிழ்மொழிக்கு அமைந்த இலக்கணங்கள் பற்றியும், தொல் காப்பியத்திற்கும் நன்னூலுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் குறித்தும் விளக்கம் பெற்றோம். தற்காலத்தில் இலக்கணப்படி எழுதாமல்-இலக்கணத்திற்கு மாறாக எழுதுவது வழக்கமாகி