பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அந்தநாட்கள் "சரி போகலாம்" என்றேன். இருவரும் அருகிலே இருந்த இராஜகுமாரி (சகானிஸ்) திரைப்படக் கொட்டகைக்குச் சென்றோம். அன்று Kingdom of Beauty என்ற ஒரு சீனப்படம் நடந்து கொண்டிருந்தது. அது ஆங்கிலத்திலே டப் செய்யப்பட்டிருந்தது. படத்தின் நடுவே கொட்டகையில் இருப்பவர்கள் சிரித்தால் ஏன் சிரிக்கிறார்கள்?’ என்று கேட்பார். உடனே நான் காரணத்தை விளக்குவேன். படம் புரியாவிட்டாலும் படத்தில் காட்டப்பட்ட இயற்கைக் காட்சிகளை வியந்து பாராட்டினார். அதில் பாடப்பட்ட சீனப் பாடல்கள் தம் தமிழ் வண்ணப்பாடல்களைப் போலவே இருப்பதாகச் சொன்னார். படம் பார்த்துவிட்டு அன்று நானும் பாவேந்தர் வீட்டிலேயே படுத்துக் கொண்டேன். காலையில் 7.30 மணிக்குக் கல்லூரி துவங்குவதால் கண் விழித்ததும் பாவேந்தரிடம் கூடச் சொல்லிக்கொள்ளாமல் புறப்பட்டு வந்துவிட்டேன். நான் புறப்பட்டு வந்த பிறகு பொன்னடியைக் கூப்பிட்டு என் பாடலை எடுத்துக்காட்டி "தோ... இரவு வந்தாரே அவர் என் மீசையைப் பத்திக் கவிதை பாடியிருக்கிறார்" என்று சொன்னாராம். 20.4.62 ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையாகையால் அன்று என் உறவினர் வீட்டுக்குப் போய்விட்டு மாலையில் சைனா பஜாரில் தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு இரவு எட்டு மணிக்குக் கல்லூரி விடுதிக்கு வந்தேன். உடனே பக்கத்து அறைக்கார நண்பர்கள் “பாரதிதாசன் வீட்டிலிருந்து உங்களைத் தேடி ஒர் இளைஞர் வந்திருந்தார். பாரதிதாசன் உம்மைக் கையோடு அழைத்து வரச் சொன்னாராம்" என்று கூறினார்கள். உடனே வந்து வண்டியேறி 9 மணி வாக்கில் பாவேந்தர் இல்லத்தை அடைந்தேன். பொன்னடி எனக்காக முற்றத்தில் காத்திருந்தார். "என்ன முருகு? ஏன் இரண்டு நாளாக வரவில்லை. கவிஞர் அடிக்கடி என்னைக் கேட்டார். “ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாச்சே? ஏன் வரவில்லை? போய்க் கூட்டிக் கொண்டு வா!' என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார். அதனால் தான் நான் கல்லூரி விடுதிக்குத் தேடி வந்தேன். எங்கு போயிருந்தீர்? என்று கேட்டார். நான் வெளியில் சென்றிருந்த காரணத்தைப் பொன்னடியிடம் கூறி விட்டுக் கவிஞரின் அறைக்குச் சென்றேன். கவிஞர் கட்டிலில் படுத்திருந்தார். என்னைக் கண்டதும் "ஏம்ப்பா இன்னைக்கு வரலை?