பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 39 உனக்காக இன்னைக்குக் கோழிக்கறி, இறால் எல்லாம் வாங்கிவந்து சமைக்கச் சொல்லியிருந்தேன்?" என்றார். "ஐயா! இன்று, கொஞ்சம் வெளிவேலை இருந்தது. உறவினர் வீட்டுக்குப் போயிருந்தேன்” என்று சொன்னேன். பிறகு சாப்பிடச் சொன்னார்; சாப்பிட்டேன். அப்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த காரணத்தால், திராவிடர்க் கழகப் பிரசார நாடகம் ஒன்று கவிஞர் வீட்டில் ஒத்திகை பார்க்கப்பட்டது. கவிஞருக்கு வேண்டிய கோவிந்தராசன் என்பவர் அந்த நாடகத்தை ஏற்பாடு செய்திருந்தார். கவிஞர் சில பாடல்களை இசையோடு பாடிக் காட்டினார். நடிக-நடிகையருக்கு தடித்தும் காண்பித்தார். ஒரு பெண் மிகவும் இனிமையாகப் பாவேந்தர் பாடல்களைப் பாடினாள். அப்பெண்ணைப் பார்த்து, "என்ன? தட்டுக்குச்சி மாதிரி இருக்கே? இப்படியிருந்தா எப்படிப் பாடுவ? பாடனுமுன்னா உடம்பு நல்லா இருக்கணும்” என்று கூறினார். நாடகத்தில் கதாநாயகியாக நடித்த பெண் படுசுட்டி. கவிஞரின் காலடியில் அமர்ந்து கொண்டு அன்பாகவும் பணிவாகவும் பேசுவாள். பாவேந்தர் படுக்கையின் மீது விரித்துப் போடப் பட்டிருந்த விலையுயர்ந்த விரிப்பு அவள் கண்ணை உறுத்திக் கொண்டே இருந்தது. ஒத்திகை முடிந்து போகும்போது அதைத் தனக்குக் கொடுக்கும்படி கவிஞரிடம் கேட்டாள். 'இதுதானே? எடுத்துக்க.." என்று சொல்லி விரிப்பை அவள் கையில் கொடுத்து விட்டார். எல்லாரும் படுக்கப் போகும்போது இரவு 1 மணியிருக்கும். விடியற்காலம் 5.30 மணிக்கு எழுந்து நான் புறப்பட்டேன். கவிஞர் எனக்கு முன்பாகவே எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு சமையலறையில் மேசை மீது கால்மேல் கால் போட்டு உட்கார்ந்த வண்ணம் காலில் தாளம் போட்டுக் கொண்டிருந்தார். இரவு எந்நேரம் படுத்தாலும் விடியற் காலை 5 மணிக்கே எழுந்திருப்பது கவிஞர் பழக்கம். கவிஞரிடம் விடைபெற்றுக் கொண்டு நான் சைதாப்பேட்டை புறப்பட்டேன். 26.1.62 இன்று ஒரு குறிப்பிடத்தக்க நாள். அனைத்துலகத் தமிழ்க் கவிஞர் பெருமன்றம் இன்று பாவேந்தர் இல்லத்தில் துவக்கப்பட்டது. நான் காலையிலேயே கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தேன். கவிஞர் பாரதி சுந்தரம் என்ற ஒர் அன்பர் வந்திருந்தார்.