பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 கவி அரச அரிமா டாகடா நா. ஆறுமுகம அறிஞர்களையும் அரசியல் மேதைகளையும் அதிக அளவில் நாட்டுக்குக் கொடுத்த பெருமை பச்சையப்பன் கல்லூரிக்கு உண்டு. பச்சையப்பன் பள்ளியில் பயின்று பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்று பச்சையப்பன் கல்லூரியிலேயே ஆசிரியர் பணியும் புரிந்தவர் நா. ஆறுமுகம். விதைப் பண்ணையிலேயே நாற்றாகிக் கதிர் குலுங்கியவர் பச்சையப்பன் கல்லூரியின் செழித்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான டாக்டர் மு.வ, அறிஞர் அ.ச.ஞா., பேராசிரியர் அன்பழகன் ஆகிய தமிழேறுகளின் மாணவர். திருமணத்துக்குப் பின் கலித் தொகையை ஆய்ந்து முனைவர் ஆனவர். வீட்டிலேயே குறிஞ்சியை வளர்ப்பவர். இன்று-புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர். பல்லவன் காஞ்சிக்குப் பாவேந்தரை அழைத்து வந்து பல எதிர்ப்புகளின் நடுவே பாட்டரங்கம் நடத்திய சிறப்பை இக்கட்டுரையில் கூறுகிறார் இவர். 1964-ஆம் ஆண்டில் சனவரித் திங்கள் பாவேந்தர் பாரதிதாசனைக் கொண்டு தமிழ் மன்றத்தின் சார்பில் கவியரங்கம் நடத்துவது என்று முடிவு செய்தோம். இரண்டு முறை நாள் குறிக்கப் பெற்று விழா நடைபெறவில்லை; மூன்றாவது முறையாக விழா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அன்று காலையிலேயே பாவேந்தரை அழைத்து வருவதற்காக ஆசிரியர் என்ற முறையில் காஞ்சியிலிருந்து சென்னை