பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அந்தநாட்கள் நண்பரென்று நினைத்திருந்தோம். சமயத்தில் காலை வாரி யிருக்கிறீரே என்று கேட்டார். சாமி. சிதம்பரம் கூட்டத்தை விட்டு எழுந்து போய்விட்டார். மறுநாள் காலை 10 மணியளவில் நான் தங்கியிருந்த இடத்துக்குச் சாமி. சிதம்பரம் வந்தார். பஃறொடை வெண்பாவின் இலக்கணம் பற்றிப் பிறகுதான் அறிந்து கொண்டேன் என்று கூறி என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்” என்று இந்நிகழ்ச்சியை முடித்தார் பாவேந்தர். "சமண ராமாயணம் என்று தமிழில் ஒரு நூல் இருக்கிறதா?" என்று பாவேந்தரை நான் கேட்டேன். 'மைசூர்க் கோலாரில் ஒரு பெளத்தர் இருக்கிறார். அவர் சுயமரியாதைக்காரர்; பெரியாரின் நண்பர். அவரிடம் இந்த சமண ராமாயணத்தைப் பார்த்தேன். அந்நூலுக்குத் தசரத காவியம்’ என்பது பெயர். பல நிகழ்ச்சிகள் மூலக்கதையினின்றும் வேறுபடுகின்றன. இதில் இராமனுக்குப் பத்தாயிரம் மனைவியரும், அனுமனுக்கு ஆயிரம் மனைவியரும் உண்டு. துளசி ராமாயணக் கதை உனக்குத் தெரியுமா? துளசி ராமாயணத்தில் இராமன் காட்டுக்குச் செல்லும் போது பூமிதேவி சீதையைத் தன்னிடத்தில் மறைத்துக் கொண்டு டியூப்லிகேட் சீதையைக் கொடுத்தாள் என்று கூறினார். 3.4.62 இன்று பாவேந்தர் 1957இல் பெங்களுரில் நடைபெற்ற குறள் மாநாட்டு நிகழ்ச்சி பற்றிக் கூறினார். அவர் கூறிய செய்தியைக் கீழே கொடுத்திருக்கிறேன்: "நான்கு ஆண்டுகளுக்கு முன் பெங்களுரில் நடைபெற்ற குறள் மாநாடு ஒன்றுக்கு நான் தலைமை தாங்கினேன். அந்த மாநாட்டில் உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை, டாக்டர் மா. இராசமாணிக்கம், மயிலை மடம் தமிழ்க் கல்லூரித் தலைவர் துரைசாமி ஐயா ஆகிய தமிழறிஞர்களும் கலந்து கொண்டனர். அப்போது அந்த மாநாட்டில் குழப்பம் செய்வதற்கென்றே ஒர் ஆத்திகக் கூட்டம் வந்திருந்தது. 1. அந்தக் கோலார் நண்பர் திரு. அப்பத்துரை ஒன்று பின்னால் விசளித்து அறிந்தேன். ந்தியவர். அவர் புத்த சமயத்தைச் சார்ந்தவர். தமிழன் என்ற