பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுக்தரம்/103 பாவேந்தர் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் நடைபெற்ற எல்லா அரசியல்-கலை ஏடுகளிலும் எழுதிஞர். இவர் நண்பர்கள் உதவியோடும், தாமாகவும் சில இதழ்கள் தடத்திவந்தார். தமிழ்நாட்டில் முதன் முதலாகக் கவிதை இதழ் நடத்தியவர் பாவேந்தரே. கி.பி. 1935 இல் வெளி யான 'பூ சுப்பிரமணிய பாரதியின் 'கவிதா மண்டலம்’ என்ற இதழே அது. முமுக்க முழுக்கக் கவிதையில் வெளி வந்த அவ்வேட்டில் விளம்பரங்கள் கூடக் கவிதையிலே வெளியாயின. திரு. தம்புசாமி முதலியார் என்பவர் அதன் பதிப்பாசிரியர்; பாவேந்தர் ஆசிரியர். திரு. நோயல் நடத்திய 'புதுவை முரசு'க்கும் பாவேந்த, ருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பாவேந்தர் பத்திரி கைத் துறைப்பட்டறிவை இந்த இதழில் தான் கர்மை யாக்கிக் கொண்டார். பாவேந்தரின் நிதியளிப்பு விழா முடிவுற்றதும் சூட்டோடு சூடாக 1947 ஆம் ஆண்டு குயில் திங்களிதழ் நூல்வடிவில், உயர்ந்த தாளில் வண்ணப் படங்களோடு வெளிவந்தது. அத்தகைய ஒரு கவிதை இதழ் தமிழில் மறுபடித் தோன்றவே இல்லை; பாவேந்த ராலும் வெளியிட முடியவில்லை. - பாவேந்தரின் முதல் குயில் சில இதழ்களோடு தன் குரலை ஒடுக்கிக் கொண்டது. குயிலின் உரிமை காரணமாகப் பாவேந்தருக்கும் T.N. இராமனுக்கும் ஏற்பட்ட வழக்கும் பின்னர் குயில் பாவேந்தரை வந்தடைந்ததும் யாவரும் அறிந்த செய்திகள். பிறகு பத்தாண்டுகள் கழித்துக் குயில் மீண்டும் 1.6.58 லிருந்து புதுவைச் சோலையில் கூவத் தொடங்கியது. அதன் இசை தொடர்ந்து இரண்டாண்டு எழு திங்கள் தமிழ் இலக்கிய உலகில் ஒஜித்துக் கொண் டிருந்தது. பாவேந்தர் பாண்டியன் பரிசைத் திரைப் பட மாக்கும் முயற்சியோடு சென்னை வந்ததும் குயில் நின்று விட்டது. மீ ண் டு ம் 15-4-62 இல் சென்னையிலிருந்து துவங்கியது. எட்டு இதழ்கள் வெளிவந்தன. பாவேந் தரின் பத்திரிகைத் துறை அனுபவம் இத்துடன் முற்றுப்