பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/104 பெற்றது. இக்குயிலைப் பாவேந்தர் வருவாய் கரு தி நடத்தவில்லை; ஒரு கொள்கை வெறியோடு நடத்திவந் தார். இக்குயில் ஏடு அன்றைய படித்த, தமிழ் ஆர்வ. மிக்க இளைஞரிடையே க வி ைத உணர்வுடையவரைத் தேர்ந்தெடுத்து ஊக்கியது. பாரதிதாசன் பரம்பரையை வளர்த்தது. பாவேந்தரின் மன உளைச்சலுக்குக் குயில் சிறந்த வடிகாலாகவும் விளங்கியது. அவர் பேணு முனை யில் காயம்படாத அரசியல் தலைவர்களோ, தமிழறிஞர் களோ புது ைவ யி லு ம் தமிழகத்திலும் இல்லையென்று சொல்லலாம். அவருடைய துணிச்சல் எல்லையில்லாதது. அவரைப் போல் வேறு யாரும் அப்படி எழுதித் தமிழ்நாட் டில் தப்ப முடியாது. அவர் குயிலில் எழுதிய உரைநடைத் தொடர்கள் நறுக்கிய கரும்புத் துண்டுகள்; செய்யுளை விடச் செறிவானவை. அவருடைய கூரிய சொற்கள் சுளிரென்று குதிரைச் சாட்டை உடம்பின் மீது வீழுவது போல் இருக்கும். கவிஞர்களின் படைப்பாற்றலைப் பற்றி உலகில் இரு வேறு பட்ட கருத்துக்களைக் கூறுவர். சி ற ந் த கவிஞர்களின் படைப்புக்கள் அவர்களுடைய வாழ்க்கையின் முற்பகுதி யிலேயே முற்றுப்பெற்று விடுகின்றன என்பது ஒரு சாரார் கருத்து. முதிர்ந்த நிலையிலும் உயர்ந்த படைப்புக்கள் தோன்றுவதுண்டு என்பது மற்றையோர் கருத்து. கீட்ஸ் தமது 24 ஆம் வயதிற்குள் இறவாத இலக்கியங்களை எழுதிவிட்டு இறந்தான். ஷெல்லி தமது 28 ஆம் வயதுக் குள் உலகப் புகழ் பெற்ற புரட்சிக் கவிதைகளை எழுதி முடித்தான். 30 ஆம் வயதுக்குள் பைரனின் உயர்ந்த படைப்புக்கள் வெளிவந்து விட்டன. நம் நாட்டுப் பாரதி யும் தமிழ்க்கவில்தித் துறையில் மர்பெரும் புரட்சிகளைச் செய்துவிட்டுத் தமது 39ஆம் வயதில் உயிர் நீத்தார். ஆளுல் கெதே தமக்கு உலகப்புகழைச் சேர்த்த மாகாவிய மான 'பாஸ்துவைத் தமது முதிர்ந்த வயதான 80இல் எழுதி முடித்தார். அவர் தமது 74ஆம் வயதில் ஒரு 17