பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/12 பாவேந்தரை நேரில் காணும் வாய்ப்புத் தடைபட்டுக் கொண்டே வந்தது. மேலும் பாவேந்தரைக் காணச் சென்று வந்த நண்பர் பலரும் அவரைப் பற்றிப் பலவித மாகக் கூறுவர். எனவே என் உள்ளத்திலும் ஒருவித அச் சம் இருந்தது. 'நன்ருகப் பழகுவாரா? மாட்டாரா?” என்று அடிக்கடி நான் எண்ணுவதுண்டு. கல்லூரியில் பொங்கல் விழா. அவ்விழா முடிந்து ஓரிரு நாட்கள் இருக்கும். மாலை 6 மணியளவில் சைதாப்பேட் டையிலிருந்து உந்து வண்டியில் புறப்பட்டுத் தேனும்பேட் டையில் இறங்கினேன். அங்கிருந்து தியாகராயர் நெடுஞ் சாலையில் சிறிது தொலைவு சென்று உருசியத் தூதர் அலு வலகத்தருகே வலது புறமாகத் திரும்பினுல் இராமன் தெரு உள்ளது. அத் தெருவில் 'பாரதிதாசன் பிக்சர்ஸ்’ என்று ஒரு பெரிய விளம்பரப் பலகை ஒரு பங்களா முகப் பில் தென்பட்டது. உடனே அந்த பங்களாவிற்குள் துழைந்து விட்டேன். முன்னுல் பெரிய வரவேற்பு அறை யொன்று இருந்தது. அதில் சோபாக்களும் நாற்காலி களும் போடப்பட்டிருந்தன. அங்கே மெலிந்த ஒற்றை நாடி உடம்புக்கார இளைஞர் ஒருவர் சுறுசுறுப்பாக எதையோ எழுதிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்த தும், "என்ன வேண்டும்? யாரைப் பார்க்கிறீர்கள்?' என்று அவர் கேட்டார். நான் முருகுசுந்தரம்... நான்' என்று கூறுவதற்கு முன்பாகவே அவர் 'ஓ நீங்கள்தாளு? தெரியுமே. சேலத் துக் கவிஞர். உம் பாட்டைக் குயிலில் அடிக்கடி பார்த்திருக் கிறேன். நான்தான் பொன்னடியான். கவிஞருக்குத் துணை யாக இருந்து எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண் டிருக்கிறேன்' என்று கூறினர். நான் 'பாவேந்தரைப் பார்க்க வேண்டும்’ என்று கூறிய தும் 'உட்காருங்கள்; சாப்பிடுகிரு.ர். சாப்பிட்டதும் பார்க்க லாம் என்று சொன்னர். பாவேந்தர் சாப்பிட்டு முடித்த