பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுக்தரம்/47 - அப்பாடலைப் பாட மாணவர்கன் தொடங்குவதற்கு முன்பே இது மதத் துரோகமான பாட்டு. இதைப் பாடி ளுல் கூடியிருப்போர் உள்ளம் புண்படும்" என்று கல்வித் துறைத் தலைவரிடம் கிருஷ்ணசாமி நாயுடுவின் ஆட்கள் கோள் மூட்டினர். ஆளுல் தலைவர் அவர்களுடைய பேச் சுக்குச் செவிசாய்க்காமல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்துமாறு கட்டளையிட்டார். மாணவர்கள் கீழ்க்கண்ட வரிகளைப் பாடினர். வறியோர்க் கெல்லாம் கல்வியின் வாடை வரவிட வில்லைமத குருக்களின் மேடை நறுக்கத் தொலைந்ததந்தப் பீடை காடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை இதைப் பாடியதும் நாயுடுவின் ஆட்கள் எதிர்ப்புத் தெரி வித்தனர். உடனே இவ்வரிகளை அப்படியே பிரெஞ்சில் மொழிபெயர்த்துத் தரும்படி கல்வியிலாகாத் தலைவர் கேட்டார். அப்படியே மொழிபெயர்த்தும் கொடுத்தனர். அதைப் படித்த தலைவரின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. 'இதுதானாய்யா நாம் இன்று எல்லாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய செய்தி. சுப்புரத்தனம் பாடியது சரி' என்று சொன்ஞர். பிறகு என்னைக் கூப்பிட்டுத் தலைவர் பெரிதும் பாராட்டிய தோடு 'உன்பேரில் பொருமைக்காரர்கள் வேண்டு மென்றே கோள் சொன்னுள்கள். நீ மீண்டும் என்னை வந்து பார், அவர்களையெல்லாம் கவனித்துக் கொள்கிறேன்" என்று கூறிச் சென்ருர். பிறகு நான் அவரைச் சந்தித்து எனக்குத்தொல்லே கொடுத்தவர்களை யெல்லாம் வேறு இடங்களுக்கு மாற்றும்படி சொன்னேன். அவ்வாறே மாற்றி அவர்கள் கொட்டத்தை அடக்கினர். அத்தலைவர் இருக்கும் வரையில் என் செல்வாக்குக் கொடிகட்டிப் பறந்தது. இந்த நிகழ்ச்சி நடந்தபோது எனக்கு வயது நாற்பது." - 亡于