பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பாவேந்தர் படைப்பில் அங்கதம்-இ இணங்கிக் கிருஷ்ணனைச் செல்ல விடுத்தாள் என்பது பாகவதம். “இராதாதேவி திருமகளின் ஆனந்த வடிவம்; பிரகிருதி அம்சம். இவள் கோகுலத்தில் இராசமண்டலத்தில் கார்த்திகை மாதப் பூரணையில் கிருஷ்ணமூர்த்தியால் பூசிக்கப்பட்டுப் பின் கோபிகைகள் முதலியவர்களால் பூசிக்கப்பட்டனள்” என்று தேவி பாகவதம் கூறுகிறது. இராதை கிருஷ்ணனைவிட வயதில் மூத்தவள் என்று சில ஆய்வாளர் கூறுகின்றனர். ஜெயதேவர் எழுதியுள்ள ஓர் அஷ்டபதியும் இதை உறுதி செய்கிறது. "வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது; காட்டு நிலம் தமாவ மரங்களின் நிழலில் கருமை நிறம் கொண்டுள்ளது; இரவு நேரமாகிவிட்டது; இவன் (கிருஷ்ணன்) பயமடைந்துள்ளான். ஒ! இராதை! அதனால் இவனை நீயே வீட்டில் கொண்டு. போய்ச் சேர்ப்பாய்! என்று நந்தகோபன் இராதையிடம் சொன்னதாக ஜெயதேவர் அதில் கூறியுள்ளார். இக்கூற்றை ஆராய்கையில், அச்சப்படும் சிறுவனாகக் கிருஷ்ணனும், வளர்ந்த பெண்ணாக இராதையும் தோன்றுகின்றனர். இர்ாதை, கிருஷ்ணனை மணந்து கொண்டு குழந்தைகளையும் பெற்றதாகச் சில் கதைகள் குறிப்பிடுகின்றன. பதினான்காம் நூற்றாண்டில் மிதிலையில் வாழ்ந்த கவிஞன் வித்தியாபதி, தான் எழுதிய மைதிலி மொழிக் காதற் கவிதையொன்றில், கிருஷ்ணன் இராதையின் காதலைப் பற்றிப் பாடும்போது, 'இதோ பார்! என் கண்ணல்ல! கோபந் தவிர்!