பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ ஆனால் அவ்வளவு எளிதாக யாரும் அவன் கவிதைக்குள் நுழைந்துவிட முடியாது. அவன் கவிதையில் படிந்துள்ள இருண்மையைப் பலரும் குறை கூறியிருக்கின்றனர். அவன் படைப்பைச் சுருக்கெழுத்துக் கவிதை என்று திருமதி பேகாட் கூறுகிறார். "திக்குத் தெரியாத காட்டில் வளைந்து வளைந்து செல்லும் ஒற்றையடிப்பாதை’ என்றும் சீனப்புதிர்' என்றும், ‘கருத்தை மறைக்கும் மூடுபனி' என்றும் பிரெளனிங் கவிதையைப் பற்றி ஃப்ரெடெரிக் டென்னிசன் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். ஆனால் அவன் சிந்தனை வேகத்தை விரைந்து செல்லும் புகைவண்டித் தொடருக்கும், கம்பிச் செய்திக்கும் ஒப்பிட்டுப் பலர் பாராட்டியிருக்கின்றனர். இராபர்ட் பிரெளனிங் ஒரு நம்பிக்கை வாதி (Optimist) வாழ்வே மாயம்; உலகே மாயம்’ என்ற பெட்டைப் புலம்பல் அவனுக்குப் பிடிக்காத ஒன்று. அவன் எழுதியுள்ள ‘குழந்தை பிப்பாவின் பாடல் (Pippas song) இக்கொள்கைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு இது இளவேனிற்காலம் இது இளங்காலைப் பொழுது மலைச் சாரலெங்கும் பனித்துளி முத்துக்கள் குயில்கள் சிறகடித்துப் பறக்கின்றன முட்களில் நத்தைகள் நெளிகின்றன ஆண்டவன் சொர்க்கத்தில் வீற்றிருக்கிறான் இந்த உலகம் இனிமையில் ஆழ்ந்திருக்கிறது என்று நம்பிக்கை உணர்வோடு வாழ்க்கையை எதிர் கொள்கிறான். இயற்கையைச் சுவைக்கத் தெரியாதவன் கவிஞனாக இருக்க முடியாது. கிழக்கு வானைக் கிழித்து வெளிவரும் செங்கதிர்ச் சுடரைப் பாராட்டாத கவிஞன் உண்டா?