பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் எப்போதும் எதிர்த்துச் சாடியவன், சுறுசுறுப்பானவன்; கலகலப்பானவன். இலண்டனில் நடைபெற்ற சமுதாய, பண்பாட்டு நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள், பொருட்காட்சிகள், ஆடம்பர விருந்துகள் எல்லாவற்றிலும் பிரெளனிங்கைக் கட்டாயம் எதிர்பார்க்கலாம். கவிஞர் டென்னிசனின் மகன், பிரெளனிங் கைப்பற்றி ஒரிடத்தில் குறிப்பிடும்போது, “கவிஞர் பிரெளனிங் மொறமொறப்பான தமது வெள்ளைக் கழுத்துப் பட்டையோடு, கலகலப்பான ஒரு விருந்து நிகழ்ச்சியில் உயிர்விட்டாலும் வியப்பில்லை' என்று வேடிக்கையாகக் கூறியுள்ளான். மனைவியின் இறப்புக்குப்பிறகு, பிரெளனிங் எழுதி வெளியிட்ட 'கணையாழியும் புத்தகமும்’ என்ற பெருங்காப்பியம் அவன் படைப்புக்களுள் குறிப்பிடத்தக்க ஒன்று. அது ரோமாபுரியில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பிரபுவின் குடும்பத்தில் நடைபெற்ற உண்மை நிகழ்ச்சிகளை மையமாக வைத்து எழுதப்பட்டது. இக்காப்பியத்தில் வரும் பாத்திரங்கள் பலதிறப்பட்டவை. இதில் வரும் கயவர்கள், வஞ்சகர்கள், கொலைகாரர்கள், சமயவாதிகள், அபலைப் பெண்கள் ஆகியோரை மிக நுட்பமாகப் பேச வைத்திருக்கிறான் பிரெளனிங். ஆங்கில இலக்கியத்தில் இயாகோவுக்கு ஒப்பான ஒரு தீக்குணப் பாத்திரத்தைக் (willon character) காணமுடியாது. பிரெளனிங் இக்காப்பியத்தில் இயாகோவுக்கு ஒப்பாக "ஃப்ரான்செஸினி' என்ற ஒரு கயவனைப் படைத்துக் காட்டியிருப்பதாகத் திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சேக்ஸ்பியரின் படைப்பான காலிபன் பாதி விலங்குத்தன்மையும், பாதி மனிதத் தன்மையும் கொண்ட காட்டுமிராண்டி தான் எழுதிய நாடகத் தனி மொழி'யில் அவனைத் தத்துவ ஞானியாகப் பேசவைத்துக்