பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகு சந்தரம் -இ ‘புத்தர் புனர்ஜென்மம் கெளதமனையும் காந்தியடிகளையும் தொடர்புபடுத்திப் பாடப்பட்ட கற்பனைக் காப்பியம். "காணிக்கை ஆதிசங்கரரின் பிறப்பு ரகசியம் பற்றியது. ஆதிசங்கரர் ஒரு கொல்லருக்கும் பார்ப்பன நங்கைக்கும் பிறந்தவர் என்பதை இக்காப்பியம் வெளிப்படுத்துகிறது. 'கற்கனி என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதை அகலிகை பற்றியது, சுவையானது. அகலிகை கூற்றாக அதில் சொல்லப்பட்ட கவிஞரின் கருத்துக்களும் புரட்சிகரமானவை. - முதிய கிழவரும் சிறுமிதனை - மணம் முடித்தது முதலில் குற்றமன்றோ? புதிய பருவ மனைவிதனைக் - கூடிப் புணராதிருந்தது குற்றமன்றோ? வந்த விருந்தினன் வேந்தெனினும் - மது வார்த்துக் கொடுத்தால் மதிமயங்கி எந்தக் குலத்துள பெண்தனையும் - கண் இருளவே தொட்டிட எண்ணானோ? முந்தைய ஆரியர் விருந்தினர்க்கு - மன மொப்பி மனைவி தனையிந்து விந்தை புரிந்திட்ட செய்தியெலாம் - பழ வேத முணர்ந்தோர் அறியாரோ? கெளதமக் கிழவன் தன்னைக் கைப் பிடித்தது பொருந்தாமணம் என்றும், வந்த விருந்தினர்க்குச் சோமபானத்தை மான்கறியோடு வழங்கி, மனைவியையும் விருந்தாகப் படைப்பது ஆரியரின் விருந்தோம்பும் பண்புதான் என்றும் சில துணிச்சலான செய்திகளைக் கவிஞர் வெளியிடுகிறார். ஆனால் இப்பாடலில் கெளதமன் அகலிகையைக் கல்லோடு பிணைத்துச் சுனையில் தள்ளிக் கொல்ல முயற்சித்திருப்பது புதிய செய்தி. சிலப்பதிகாரத்தைப் பாரதிதாசன் விருத்தப்பாவில் மறுபடைப்புச் செய்திருக்கிறார். பாரதிதாசனுக்கு முன்பே கம்பதாசன் சிலம்பைப் புதுத்தமிழில் புனைந்திருக்கிறார்.