பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாவேந்தர் படைப்பில் அங்கதம் தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான் என்பது மொழிகரந்துரைக்கும் பழிகரப் பங்கதம். தொண்டை மானிடத்தில் தூது சென்ற அவ்வை பாடிய இவ்வே பீலியணிந்து என்று தொடங்கும் புறநானூற்றுப்பாடலும் பழிகரப்பங்கதத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு, அங்கதத்தை நாம் தனிப்பாடல் அளவிலேயே நிறுத்திக் கொண்டோம். ஆனால், மேலைநாட்டு இலக்கிய வல்லுநர்கள் அதை ஒர் இலக்கியத் துறையாக வளர்த்திருக்கின்றனர். அங்கதத்தை அவர்கள் Satire என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர். இந்த ஆங்கிலச் சொல் Satura என்ற இலத்தீன் சொல்லை வேர்ச் சொல்லாகக் கொண்டது. இந்த இலத்தீன் சொல்லுக்கு நிறைவானது என்றும், 'பல்வேறுபட்ட சுவைக்கலவை என்றும் பொருள். எனவே, அங்கதப்பாடல் வசை, பரிகாசம், சமத்காரம், துட்பம் என்னும் பல்வகைப் பண்புகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. "அங்கதம் என்பது நகைச்சுவையும், புலமை துட்பமும், திறனாய்வு நோக்கும் கொண்ட ஒர் இலக்கிய உத்தி. இது மக்கட் சமுதாய மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டது' என்று ஆங்கில இலக்கியக் கையேடு ஒன்று வரையறுத்துக் கூறுகிறது. "தீமைகளையும் குற்றங்களையும் கண்டனம் செய்யும் பாடல் அங்கதம்” என்று ஜான்சனின் ஆங்கில அகராதி பொருள் கூறுகிறது. “தீய செயல்களைத் திருத்துவதே அங்கதப் பாடலின் அடிப்படை நோக்கம்” என்று ஆங்கிலக் கவிஞர் டிரைடன் கூறுகிறார். - "அங்கதம் என்பது ஒவ்வொருவருடைய உண்மையான முகங்களைக் கண்டறியும் கண்ணாடி' என்று ஆங்கில எழுத்தாளர் ஸ்விஃப்ட் கூறுகிறார்.