பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாவேந்தர் படைப்பில் அங்கதம் சிந்தனா சக்தி சிறிதுமின்றி மக்களுக்குத் தம்தோள் உழைப்பினிலே நம்பிக்கை தானுமின்றி ஊறும் பகுத்தறிவை இல்லா தொழித்துவிட்டுச் சாரற்ற சக்கையாய்ச் சத்துடம்பைக் குன்றவைத்துப் பொற்புள்ள மாந்தர்களைக் கல்லாக்கி யேஅந்தக் கற்கள் கடவுள்களாய்க் காணப்படும் அங்கே! இது கடவுள் எதிர்ப்புப் பாடல். இந்த நாட்டில் இருக்கின்ற மதங்கள் கந்தக வீட்டில் கனலின் கொள்ளிகள்! இது மத எதிர்ப்புப் பாடல். ஆடவரின் காதலுக்கும். பெண்கள் கூட்டம் அடைகின்ற காதலுக்கும் மாற்ற முண்டோ? பேடகன்ற அன்றிலைப் போல், மனைவி செத்தால் பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட் கின்றான். வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள் மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ? பாடாத தேனிக்கள், உலவாத் தென்றல் பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ? இது கைம்மை எதிர்ப்புப் பாடல். மலம்பட்ட இடம் தீட்டாம் மக்கள் சிலரைத் தொட்டால் தலைவரைக்கும் தீட்டாம் - சகியே தலைவரைக்கும் தீட்டாம்! இது தீண்டாமை எதிர்ப்புப் பாடல். பிறப்பி லுயர்வுதாழ்வு பேசும் சமூகம் மண்ணில் சிறக்குமோ சொல்வாயடி - சகியே சிறக்குமோ சொல்வாயடி! இது சாதி எதிர்ப்புப் பாடல்.