பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் (3) காந்தியம் பாடிய கவிக்குயில் பாரதிதாசன் திராவிட இயக்கத்தில் காலெடுத்து வைப்பதற்கு முன்பு, புதுவைக் கனக சுப்புரத்தனம் பேராயக் கட்சியின் உண்மை ஊழியராகவும், சிறந்த காந்தியவாதியாகவும், முருக பக்தராகவும் விளங்கினார். இது தமிழ்மக்கள் பலருக்குத் தெரியாது. இந்திய தேசியம் பாடிப் பல ஆண்டுகள் பயிற்சி பெற்ற பிறகுதான் அவர் தமிழ்த்தேசியம் பாடினார். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்கத் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த அரவிந்த கோஷ், தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரதி, வவேசு அய்யர், வாஞ்சி நாதன், மாடசாமி ஆகியோர், ஆங்கில அரசின் தொல்லைக்கு அஞ்சிப் பிரெஞ்சுப் புதுவையைப் புகலிடமாகக் கொண்டு வாழ்ந்தனர். இந்தத் தீவிரவாதக் கும்பலோடு கட்டிளங் காளையான கனக சுப்புரத்தனமும் சேர்ந்துகொண்டார். ஆங்கில அரசின் ஒற்றர்களின் பிடியில் சிக்காமல் இவர்களைப் பாதுகாத்தார் தீவிரவாதிகளுக்குத் துப்பாக்கி வாங்கிக் கொடுத்தார்; தீவிரவாத நடவடிக்கைகளில் பங்கு கொண்டு இவரும் தீவிரவாதியாகவே வாழ்ந்தார். இச்செய்திகள் யாவும் இவர் எழுதியுள்ள நூல்கள் மூலமாகவும், இவரைப் பற்றிப் பிறர் எழுதியுள்ள நூல்கள்