பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாவேந்தர் படைப்பில் அங்கதம் போட்டுக் கொண்ட தமிழ்க் கவிஞர்கள் ஏராளம். எலியட்டின் பாழ்நிலத்தைப் படியெடுத்துத் தம் கற்பனைப் படைப்பாக்கிக் கொண்ட நகல் கவிஞர்களும் இங்கு உண்டு. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒருவன் சிறந்த தமிழ்க்கவிஞனாக விளங்க வேண்டுமென்றால், அவன் பன்மொழியறிவும், பல்துறையறிவும் பெற்றவனாக இருப்பதோடு, தமிழ் இலக்கண இலக்கியப் புலமை மிக்கவனாகவும் இருக்க வேண்டும். இத்தகுதிகள் பெற்ற தமிழ்க் கவிஞர்களை ஒரு கை விரல்களால் எண்ணிவிடலாம். அவர்களுள் அப்துல்ரகுமான் முதல்வர். இவருக்குச் செறிவான தமிழ்ப் புலமையும், உருதுப் புலமையும், பாரசீக ஆங்கிலப் பயிற்சியும் உண்டு. அப்துல் ரகுமானின் ‘பால்வீதி வெளியான போது, அந்நூலைப் பாராட்டியும் கேலி செய்தும் ஏகப்பட்ட விமர்சனங்கள் வெளிவந்தன. அந்நூலின் வாசலில் காலெடுத்து வைக்கும்போதே தலையில் இடிப்பது போல் முதற்பாடல் அமைந்துள்ளது. என் ஆறாவது விரல் வழியே சிலுவையிலிருந்து வடிகிறது ரத்தம் ஆம - என் மாம்சம் வார்த்தை ஆகிறது இதைப் படித்தவுடன் எல்லாருக்கும் குழப்பம் “ஆறாவது விரல் என்பது அவர் எழுதுகோலின் உருவகம். அதைத் தொடர்ந்து வரும் வரிகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் பைபிள் படித்திருக்க வேண்டும். அவருடைய உடலையும், உள்ளத்தையும் உருக்கி வெளிப்படுத்தும் கவிதை உணர்வே மாம்சம். பால்வீதியில் 'செவியின் சுவாசம் என்பது ஒரு பாடலின் தலைப்பு. இஃது இசையைப் பற்றிய கிவிதை.