பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகித்திய அகாடமி பரிசு (மிகச் சிறந்த இலக்கிய நுட்பங்களுக்கு, தமிழ் பயன் விளக்கும் பிற ஆக்கங்களையும் தவிர்த்து விட்டுப், பாவேந்தரின் எளியதொரு நாடக நூலான பிசிராந்தையார் சாகித்ய அகாடமி வழங்கிய பரிசின் உள்நோக்கம் எது வென்பதை இப்பகுதியுள் ஆசிரியர் சுட்டுகின்ருர் ஆரியப் பார்ப்பனரின் அள விறந்த கொட்டங்கள் என்னும் நூலின் ஒரு சிறிய பகுதி இது!) 'சாகித்ய அகாடமி என்றும் சங்கீத நாடக அகாடமி: என்றும், நேரு பரிசு, கலிங்கா பரிசு, ஞானபீட பரிசு என்றும் பல வகையிலும் தரப்பெறுகின்ற அறிவியல், கல்வி, கலைப் பரிசுகள் யாவும் அவர்கள் (பார்ப்பனர்) இனத்தவர்க்கே தேடிப்பிடித்துத் தரப் பெறுகின்றன. ஓரிரண்டு பரிசுகள் தமிழர்களுக்குத் தரப்பெறுவதானாலும் அவர்களின் அடிமை களுக்கே தரப்பெறுகின்றன! இலைகளிடைக் காய்போல் எங்கோ ஒரு பரிசு இவர்களின் கொள்கைக்கு மாறனவர்களுக்குத் தரப்பெற நேர்ந்தால், பிறர் நகைக்குமளவிற்கு நூல்களைத் தேர்வுசெய்து கொடுக் கின்றனர். பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம் போன்ற வாழ்வியல், இயற்கை,சீர்திருத்தம் ஆகிய கூறுபாடுகளைக் கொண்டனவும், நோபல் பரிசுக்கும் தகுதி பெற்றனவும், அவர் புலமைக்கே கொடுமுடி போன்றனவுமான நூல்கள் இருக்க, அவர் நூல் களில் மிக எளியதும், அவர்தம் பாவியல் புலமைக்கு வேறு பட்ட நாடக வடிவில் உள்ளதுமான "பிசிராந்தையார்’ என்னும் நூலுக்கு - அதில் அவரின் தலையாய கொள்கையான ஆரிய மறுப்புக் கருத்துகள் ஒன்றுமில்லை என்பதற்காகவே 'சாகித்திய அகாடமி பரிசு” கொடுக்கப் பெற்றுள்ளது. இது தமிழர்களையும் இவர்தம் ஆற்றலையும் இருட்டடிப்புச் செய்கின்ற வஞ்சகமான செயலாகும் என்பதை எல்லாரும்