பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 4 பேருக்கு ரூ. 1000 பாரதிதாசன் பற்றி புத்தகம் எழுதிய புலவர் ராம நாதன் (கவிஞரும் காதலும்), சாலே இளந்திரையன் (புரட்சி முழக்கம்), இளங்கோ (பாரதிதாசன் கவிதைப் பாடல்கள், பாரதிதாசன் இலக்கியம்), மயிலை நாதன் (புரட்சிக்கு வித்திடும் பாவேந்தர் பாட்டு)ஆகிய 4 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. பதிப்பாளர்க்கு ரூ.1000 முதல் முதலில் பாரதிதாசன் புத்தகங்களே சிறந்த முறையில் பதிப்பித்த பதிப்பாளர் முல்லை முத்தையாவுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இவர்கள் 5 பேரையும் அமைச்சர் அரங்கநாயகம் பாராட்டி பொன்னடை போர்த்தினர். விருது பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக இருந்து மறைந்த கவிஞர் எஸ். டி. சுந்தரம், கவிஞர் வாணிதாசன் ஆகியோர் குடும்பத்துக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் பாவேந்தர் பாரதி தாசன் விருதும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறி வித்து இருந்தது. ... இந்த விழாவில் அமைச்சர் அரங்கநாயகம் இந்த ரொக்கப் பணத்தையும், விருதையும் வழங்கினர். -தினத்தந்தி ஏப்ரல் 29, 1979