பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 தேசிய எழுச்சியும், தெய்வபக்தியும் உண்மையாகவே அதிகரித்திருந்த காலம் அது. அத்தகைய சூழ்நிலையில் பல எதிர்ப்புகளுக்கிடையே பாரதிதாசன் உறுதியாக, படிப் படியாக முன்னேறினர். தமிழ் நாட்டின் பல பகுதி களுக்கும் சென்று சொற்பொழிவு நிகழ்த்தினர். பேராசிரியர் கி. சுவாமிநாதன் அவர்கள் ஹனுமான்' என்னும் வார இதழின் ஆண்டு மலரில், பாரதிதாசனின் கவிதைகளை விமர்சித்து நீண்ட கட்டுரை ஒன்று எழுதி யிருந்தார். அதன் இறுதியில், “பாரதிதாசன் நமது பழங் கலைகள் அனைத்தையும் தட்டிக் குப்புறக் கவிழ்த்துவிட்டு புதுத் தமிழ்நாடு ஒன்றை கிருஷ்டித்து, அதற்கு தானே கவிராஜனக முயற்சிக்கிருர். அது வீண் முயற்தி' எனக் குறிப்பிட்டிருந்தார். அவருடைய கூற்றுப் பொய்யாகியது. இன்று தமிழ்நாட்டில், பாவேந்தர் பாரதிதாசன் நிகரற்று விளங்குகிருர், பாரதிதாசனைப் பின்பற்றிப் பாடுவோர் தொகை பாரதி தாசன் பரம்பரை என்ற பெயரில் உருவாகத் தொடங்கி வளர்ந்து வருகிறது. பாரதியாருக்குப் பிறகு வாழ்ந்த கவிஞர்களில் பாரதி தாசனுக்கு உண்டான பெருமையும் சிறப்பும் வேறு எந்தக் கவிஞருக்கும் ஏற்படவில்லை. தம் வாழ்நாளிலேயே அந்தப் புகழைக் கண்டு களித்து இன்புற்ருர் பாரதிதாசன். அவர் மறைந்த பிறகும் அந்தப் புகழ் தழைத்து ஓங்கி, ஆண்டுதோறும் அரசு விழா நடத்தி, பரிசுகளும் விருதுகளும் வழங்கி, கெளரவிக்கக் கூடிய நிலை உண்டாகி இருப்பதைக் காண தமிழ் நெஞ்சங்கள் எல்லாம் பூரிக் கின்றன.