பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பிடியும் களிறும்

சிவந்து, ஒரு முகூர்த்தம் முழுவதும் மனம் வெதும்பித் துடிதுடித்து எழுந்து, அப்பால் அந்தச் சினம் ஆறி, "இரு வர்களிடத்திலும் குற்றம் ஏதும் இல்லை’ என்று சிந்தித்து, தாம் சினம் கொண்டமைக்காக மனம் கலங்கி நாணத் தால் தலையைச் சாய்த்தார்கள்.

தெரி கணை-ஆராய்ந்து எடுக்கும் அம்பு. சிலை-வில். சேந்து-சிவந்து, பகல்-முகூர்த்தம்; மூன்றே முக்கால் நாழிகை; ஒன்றரை மணி நேரம். உருத்து-புழுங்கி. தெரு மந்து-மனம் சுழன்று)

தோழியும் தலைவியும் வீட்டுக்குப் புறம்பே மலைச் சாரற் சோலையில் இவற்றைப் பேசிகொண்டிருக்கிருர்கள். தோழி தான் அறத்தொடு நின்றது முதல் தமையன்மார் அறிந்தது வரையில் சொன்னுள். குறிஞ்சிநில மக்கள் ஏதேனும் நல்ல காரியம் செய்யுமுன்னர்த் தம்முடைய நிலத்துக் கடவுளாகிய முருகனை வழிபடுவது வழக்கம். வழி படுவதோடு குரவைக் கூத்து ஆடிப் பாடுவார்கள். இனி மேல் தலைவனுக்கும் தலைவிக்கும் மணம் நிகழும் என்ற 'நம்பிக்கை தோழிக்கு உண்டாயிற்று. ஆயினும் இதை முற்ற முடிக்கும்படியாக மலையுறை தெய்வமாகிய முருகக் கடவுளை வேண்டிக் கொள்ள வேண்டுமென்று தோன்றியது.

தோழி : ஆராய்ந்து எடுத்த அணிகளை நீ அணிந்துகொண் டிருக்கிருய். இவ்வளவும் பயன்பட வேண்டுமாயின் நீயும் நின் தலைவனும் நாடவர் அறிய நன்மணம் புணர வேண்டும். அப்படிப் புணரும் பொருட்டு வரையுறை தெய்வத்தின் திருவருளைப் பெறவேண் டும். அத் தெய்வத்தின் திருவுள்ளம் மகிழும்படி நாமும் மற்றத் தோழிமாரும் மனம் உவந்து குரவைக்