பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முயற்சி 89

கூத்தை ஆடலாம் வா; அப்படி ஆடும் குரவைக் கூத் தில் நீ கொண்டுநிலைப்பாட்டைப் பாடுவாயாக. தெரியிழாய்! நீயும்.கின் கேளும் புணர வரைஉறை தெய்வம் உவப்ப உவந்து குரவை தழீஇயாம் ஆடக் குரவையுள் கொண்டு நிலைபாடிக் காண்.

(ஆராய்ந்து எடுத்து அணிந்த இழைகளை உடைய வளே, நீயும் நின் காதலனும் மணம் புணரும்படியாக, மல்ே யில் உறைகின்ற தெய்வமாகிய முருகன் திருவுள்ளம் உவக் கும்படி, நாம் மகிழ்ந்து குரவைக் கூத்தைக் கைகோத்துக் கொண்டு ஆட, அந்தக் குரவைக்கூத்தில் முதலில் ஒருவர் பாட, அதைத் தொடுத்துப் பாடும் கொன்டுநிலைப் பாட்டை நீ பாடுவாயாக. -

தெரியிழை: அன்மொழித்தொகை; தெரியிழாய் என்பது அதன் விளி. கேள்-கணவன் . புணர-ஒன்று பட. வரை-மலை. உறை-வாழும். உவப்ப-மகிழ. குரவைக்கூத்து என்பது கையைக் கோத்துக்கொண்டு சுற்றிச் சுற்றி வந்து ஆடும் ஒருவகைக்கூத்து. குறிஞ்சி நிலத்தவர் ஆடும் குன்றக் குரவையையே இங்கே கொள்ளவேண்டும். முல்லை நிலத்து மகளிரும் குரவை கூத்து ஆடுவதுண்டு. தழிஇ-தழுவி, கை கோத்துக் கொண்டு. கொண்டு நிலை; ஒருவர் கூற்றினை ஒருவர் கொண்டு கூறுதலிற் கொண்டுநிலையாயிற்று' என்பது நச்சிளுர்க்கினியர் உரை. பாடிக் காண்: காண் என்பது துணைவினை; அதற்குத் தனியே பொருள் இல்லை; பாடு என்பதே பொருள்.)

தோழி மணம் நிகழும் என்று சொல்லவே, தலைவி அந்த இனிய நிகழ்ச்சியை நினைத்துப் பார்க்கிருள். பல

பேருக்கு நடுவில் தலைவளுேடு அமர்ந்திருப்பதை நினைக்கும் போது அவள் உடம்பு புளகம் போர்த்தது. அத்தனை