பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பிடியும் களிறும்

பேருக்கு நடுவில் அவளுேடு வீற்றிருப்பதற்கு முடியாது போல் தோன்றியது. அவ்வளவு நாணம். எத்தனையோ இடங்களில் மணங்கள் நிகழ்கின்றனவே; அங்கெல்லாம் மகளிர் தம் மளுளரோடு பல பேருக்கு நடுவில் ஒன்றி வீற்றிருக்கிருர்களே! அவர்களுக்கு நாணம் இல்லையா? எப்படி அவர்கள் நாணத்தை அடக்கிக் கொண்டு அமர்ந் திருப்பார்கள்? நம்மால் முடியாதுபோல் இருக்கிறதே! அவர்கள் ஏதாவது நோன்பு நோற்று அத்தகைய ஆற்றலை பெற்ருர்களோ! தலைவி அதை நினைத்து நினைத்துக் கூசு கிருள்.

தோழி : என்ன அப்படி மெய்சிலிர்க்கிருயே!

தலைவி நல்ல பெண்ணே, நீ சொன்னயே திருமணத் தைப்பற்றி; அந்த நல்ல நாள் வரும்போது நம்மு டைய சுற்றத்தாரெல்லாம் சூழ இந்த நம் மலையிலே தலைவருடன் அமர்வதற்கு நாணம் இடம் கொடுக் காதுபோல் இருக்கிறதே! தம் நாணைத் தடுத்து நிறுத்தும் மகளிரும் இருக்கிருர்கள். அவர்கள் பாக்கிய சாலிகள். அவர்கள் என்ன நோன்பு நோற்ருர்களோ, அறியேன்.

ങ്ങ്, கன்னுள் தலைவரும் எல்லை நமர்மலைத் தம்காண்தாம் தாங்குவார் என்நோற் றனர்கொல்?

(எனக்கு நல்ல தோழி நீ சொன்ன அந்த நல்ல நாள் வரும்போது, நம்மவர்களுடைய மலையில் இத்தகைய சந் தர்ப்பத்தில் எழும் தம்முடைய நாணேத் தாமே தடுத்து நிறுத்தும் ஆற்றலுடைய மகளிர் என்ன நோன்பு நோற் ருர்களோ?

நன்னுள் என்றது திருமண நாளை. தலைவரும்:தலை என் பது பொருளற்ற சொல்; வரும் என்பதே பொருள். வரும்