பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முயற்சி 91

எல்லை-வரும்போது தாங்குவார்-நாணத்தால் எழுந்து ஒடிப்போகாமல் அதைத் தடுத்து அமர்வார். நோற்றனர் கொல்-நோன்பு செய்தார்களோ. இயல்பாக மகளிருக் குள்ள நாணத்தை அடக்கும் ஆற்றலைப் பெற மெய்

வருந்தி நோன்பு நோற்றிருக்க வேண்டும் என்ருள் 1

தல்ைவி மகிழ்ச்சி மீதுார்ந்து பேசலாளுள்.

தலைவி : கல்யாணம் நம்முடைய வீட்டில்தானே நடை

பெறும்? வேங்கை பூத்து நிற்கிறது. அது நம்முடைய மணத்துக்குரிய நாள் இதுவென்று சொல்வது போல இருக்கிறது. இதுகாறும் தினைப்புனத்தில் என் காதலரைக் கண்டு அளவளாவி வந்தேன் அங்கே வேங்கை மரம் தன் பூந்தாதினைக் கீழே உதிர்க்க, கீழிருந்த பாறையில் அது பரந்து அப் பாறைக்குப் பொன் மெருகிட்டாற் போல விளங்கும். அந்தப் பாறையாகிய முற்றத்திலே உண்மையாக நான் என் தலைவரோடு ஒன்று பட்டேன். அது வெறும் கனவல்ல; நனவிலே நிகழ்ந்த புணர்ச்சி, எம் பெருமாளுேடு புனவேங்கையின் தாது உதிரும் பொன்னிறப் பாறை முன்றிவில் கனவிலே நிகழ்ந்த புணர்ச்சி இங்கே தம் வீட்டிலே இனி நிகழும் அல்லவா?

தோழி : இனி நாடு அறிய நீயும் அவரும் மனைவியும்

கணவரும் ஆனபின்பு இல்லத்திலே இணைந்து இன் புறுவதில் என்ன ஐயப்பாடு?

தலைவி அவரைக் காளுமல் வீட்டுக்குள் அடைபட்டுக்

கிடந்த காலத்திலெல்லாம் அவரைக் கண்டு குலாவு

  • சுற்றத்தாரிடை வரைதலாற் பிறந்த நாண் தாங் கல் அரிதென்ருள். - கச்சிஞர்க்கினியர் உரை. . . .