பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முயற்சி 87

அஞ்சும்படி இருந்தது அவர்கள் நிலை, மனம் வெதும்பி எழுந்தார்கள். -

தலைவி, பிறகு?

தோழி! நல்வ வேளே! இந்தக் கோலம் ஒரு முகூர்த் தந் தான் இருந்தது. பிறகு அவர்கள் கோபம் ஆறியது. சிறிது சிந்தித்தார்கள்; எதற்காகச் சினம் கொள்ள வேண்டும் என்று யோசித்தார்கள். நீ ஆற்றேடு போனது நீயாகச் செய்த தவரு? இல்லை. அப்படிப் போகும்போது அப்படியே உன்னைப் போகும்படி யாக விட்டு விடாமல் தண்ணிரிலே பாய்ந்து உன் உயிரைத் தலைவர் காப்பாற்றினரே; அது பிழையா? அதுவும் இல்லை. நீ வேண்டுமென்று செய்யாமை யால் நீ செய்தது பிழையன்று. அவர் விரும்பி உன்னைக் காப்பாற்றிலுைம் அப்படிச் செய்யாமல் இருந்தால் உன் உயிருக்கு ஏதம் வருமாதலால் அவர் செய்ததும் பிழையன் று. இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்தார்கள். இருவரிடமும் , பிழை இல்லை என்று உணர்ந்தார்கள்; அப்போது அவர் களுக்கே மனம் சுழன்றது. சினத்தால் என்ன காரியம் செய்ய இருந்தோம் என்று நாணம் உண்டாயிற்று. தம் தலையைக் கவிழ்த்துக் கொண்டார்கள். இனி அவர்களால் ஒரு தடையும் நிகழாது.

அவரும் - தெரிகணை நோக்கிச் சிலநோக்கிக் கண்சேந்து ஒருபகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி, "இருவர்கட் குற்றமும் இல் லயால்' என்று தெருமந்து சாய்த்தார் தலை.

(தாய் கூறியவற்றைக் கேட்ட அவர்களும் சினம் அடைந்து கூர்மையுடையனவா என்று ஆராய்ந்து எடுக் கும் அம்புகளைப் பார்த்து, வில்லையும் பார்த்து, கண்கள்