பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பிடியும் களிறும்

என ஆங்கு அறத்தொடு கின்றேனக் கண்டு திறப்பட என்னையர்க்கு உய்த்து உரைத்தாள் யாய்

(என்று அப்படி என் தாய்க்கு அறத்தொடு நின்ற என் இயல்பையும் கூற்றையும் என் தாயால் தான் உணர்ந்த போது, நன்கு ஆராய்ந்து உணர்ந்து, நம் தமையன் மார்க்கு எந்த வகையில் சொன்னுல் ஏற்குமோ அந்த வகையில் அமையும்படி, அவர் நெஞ்சிலே படும்படியாகச் செலுத்தி நம் தாய் சொன்னுள்.

ஆங்கு-அவ்வாறு; மேலே செவிலியிடம் சொன்ன படியைச் சுட்டியது. நின்றேன-நின்ற என்னை கண்டுஆராய்ந்து அறிந்து திறம்-வகை; என்றது, தமையன்மார் சினம் இன்றி ஏற்கும் வகையை. என்னையர்-தமையன்மார் தம் ஐயன் என்பதே தமையன் என வந்தது. உய்த்துநெஞ்சிலே கதுவும் படி செலுத்தி. யாப்-நம் தாய்; என்றது. நற்ருயை..} -

தோழி நேரே நற்ருய்க்கு அறத் தொடு நிற்பதும், செவிலி தமையன்மாருக்கு அறத் தொடு நிற்பதும் மரபு அல்ல; ஆகவே தோழி செவிலிக்குச் சொல்ல, அவள் நற்ருய்க்குச் சொல்ல, அவள் தமையன்மாருக்குச் சொன்னுள்.

தலைவி; நம் தமையன்மார் அன்னை கூறியதைக் கேட்ட

வுடன் என்ன செய்தார்கள்?

தோழி. மறக்குடியிற் பிறந்த அவர்கள் அதை அப்படியே பொறுமையாகக் கேட்பார்களா? கேட்டவுடன் அவர்கள் கோபத்தால் துடி துடித்தார்கள். அவர் களுடைய கண்கள் அம்பைப் பார்த்தன; வில்லைப் பார்த்தன; கோபத்தாற் சிவந்தன. தெஞ்சம் புழுங் கியது. என்ன செய்யப் போகிருர்களோ என்று