பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முயற்சி 85

சிறந்தது. ஆதலின் உண்மையைச் சொன்னதன் வாயி

லாகச் சிறந்த அறத்தோடு நின்ருள். அன்றி, தலைவியின்

கற்பாகிய அறத்தைக் காப்பாற்றும் நெறியிலே அவ்வறத்

துக்குச் சார்பாகவும் நின்ருள். இவ்வாறு தலைவி ஒரு தலைவனிடம் காதல் உடையவளாளுள் என்றஉண்மையை வெளிப்படுத்துவ தல்ை உண்மையென்னும் அறமும், கற்பு என்னும் அறமும் பாதுகாக்கப் பெறுதலின், இத்தகைய

கூற்றை அறத்தொடு கிற்றல் என்று தமிழ்ப் புலவர்கள் சொல்வார்கள்.

தோழி செவிலிக்கு அறத் தொடு நின்ருள். அதைக் கேட் ட செவிவி தலைவியைப் பெற்றவளாகிய நற்ரு ய்க்கு இதை அறிவித்தாள்; தோழி கூறியதாகச் சொன்னுள். தோழி தலைவியோடு ஒன்றிப் பழகுகின்றவள் என்பதை நன்கு சிந்தித்துப் பார்த்த தாய் அச் செய்தியை மெல்லத் தலைவியின் தமையன்மாருக்குப் புலப்படுத்தினள்.

இதனைத் தெரிந்து கொண்ட தோழி மேலே நிகழ்வ தனையும் கவனித்தாள். தமையன்மார் முதலில் சீறி எழுந் தாலும் பின்னலே சினம் ஆறிஞர்கள். இனித் தலைவர் இவளே மணந்துகொள்வதற்கு இடையூறு ஒன்றும் இல்லை’ என்று தோழி ஆறுதல் பெற்ருள். இந்த இன்பச் செய்தி யைத் தலைவிக்குச் சொல்லப் புகுந்தாள்.

முதலில் தான் ச்ெவிலியிடம் கூறியவற்றை யெல் லாம் எடுத்துரைத்தாள். பின்பு, "இப்படி நான் அறத் தொடு நின்றேன். என் தாய் உன் தாய்க்கு அதைச் சொன்னாள். அவள் அறத்தொடு நின்ற என் இயல்பை ஆராய்ந்து யான் கூறியது உண்மையாகவே இருக்கு மென்று கண்டு, எப்படிச் சொல்ல வேண்டுமோ அத் தகைய பக்குவத்தோடு நம் தமையன்மார்க்கு மெல்ல

மெல்லச் சொல்லிப் புலப்படுத்தினுள்” என்றுள்,