பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முயற்சி 93.

ஆம், அசைநிலை. நடக்கலும் ஆங்கே-நடந்தவுடன்

அப்போதே, கடிதும்-போக்குவோம்; விரும்பமாட்டோம்.

ஆம்: அசைநிலை.)

•. 革

தோழி தலைவியின் பெருமகிழ்ச்சியைக் கண்டு

பூரித்தாள்.

தோழி : தலைவருடன் நீ அமரும்போது நீ எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? தலைவரை நீ முன்பு அறியாத வளைப் போலவும், பழகாதவ்ளைப் போலவும் இருக்க வேண்டும். அவரும் அப்படியே உன்னை முன்பு அறியாதவளைப் போலவே பழகுவார். நாலு பேருக்கு நடுவில் இப்படி நீங்கள் நடப்பீர்கள் அல்லவா?

தலைவி ஆம்; அப்படித்தானே இருக்க வேண்டும்?

தோழி : நான் என்னசெய்ய வேண்டும் தெரியுமா? நீங்கள் ஒருவருக்கு ஒருவர் புதியவரைப் போல நடந்து கொள் வதைப் பார்த்தால் எனக்குச் சிரிப்பு வரும்; வியப்பும் உண்டாகும். ஆனல் அவற்றை நான் வெளிப்படை யாகக் காட்டிக் கொள்ளமாட்டேன். பண்டுஅறியாதிர் ப்ோல் நடந்துகொள்ளும் உங்கள் பழங்கேண்மையைச் சிறிதும் அறியாதவ்ளைப் போலவே நான் நடப்பேன். என்க்குத் தெரிந்தவற்றையெல்லாம் மறைத்து, நானும் தல்ைவரைத் தெரியாதவளைப் போலவும் உங்கள் உறவை அறியாதவளைப் போலவும் இருக்க வேண்டும். அப்படி இருப்பேன? உனக்கு என்ன தோன்றுகிறது? - - *'உம் மீற்று வினையெச்சம் விரைவு தோன்ற நின்றது.. கச்சிஞர்க்கினியர்.

3 'நனவிளும் புணர்ச்சி, கனவினம் புணர்ச்சியென ஆம் என்பவற்றைக் கூட்டுக.--ச்சிஞர்க்கினியர்.