பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பிடியும் களிறும்

தலைவி : நாங்கள் பண்டு அறியாதார் போல இருப்பது தான் நலம். அப்படியே நீயும் கண்டறியாதவளைப் போலக் கரப்பதுதான் நலம். -

தோழி: ஆம். அப்படித்தான் செய்யவேண்டும். விண் ணளவும் உயர்ந்து நிற்கும் மலைநாடரும் நீயும் கல்யாணத்தில் எப்படி நடக்கிறீர்களோ! பார்க் கலாம். நானும் எப்படி நடந்து கொள்கிறேனே! பார்க்கலாம்.

விண்தோய்கல் நாடனும் நீயும் வதுவையுள் பண்டுஅறியா தீர்போல் படர்கிற்பீர் மற்கொலோ? பண்டு அறியா தீர்போல் படர்ந்தீர் பழங்கேண்மை கண்டு அறியர தேன்போற் கரக்கிற்பென் மற்கொலோ?

(வானத்தைத் தொடும் மலைநாடனும் நீயும் செய்து கொள்ளும் மனத்தில் முன்பு அறியாதவர்களைப் போல நீங்கள் மிகவும் பக்குவமாக நடப்பீர்களோ முன்பு அறியாதவர்களைப்போல் நடக்கும் உங்களுடைய பழைய தொடர்பைக் கண்டறியாதவளைப் போல நான் மிகவும் மறைக்கும்ஆற்றல் பெறுவேனே?!

விண்-வானம். கல்-மலை. வதுவை-மணம். படர்கிற் பீர். நடந்து கொள்வீர்கள். மன்: மிகுதியைக் காட்டும் இடைச் சொல். கொல்: அசைநிலை; பொருளற்ற சொல். கேண்ம்ை-நட்பு. கரக்கிற் பென்மற்கொலோ-நன்முக மறைக்கும் வன்மை உடையேனவேனே? கில் என்பது ஆற்றலை உணர்த்த வரும் இடைச்சொல். ஒ என்பது ஐயத்தைப் புலப்படுத்தியது.1

மேலும் தோழி பேசுகிருள் :