பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முயற்சி 95

தோழி : அவருடைய மலையில் நல்லவர்கள் வாழ்கிரு.ர்கள். அதனால் எப்போதும் மழையில்ை குறைவில்லாத மலே அது. கறுத்த மேகங்கள் அதன்மேல் தவழ்ந்து கொண்டே இருக்கும். மைதவழும் வெற்பையுடைய தலைவர் மணக்க வருவார். அவருடைய மணக் கோலத்தை என்னுடைய கண்களால் மொண்டு உண்பேன். அந்த மண அணியைக் காணுமல் நாணத் தால் கண்ணைக் கையில்ை பொத்திக் கொள்ளும் கண்களும் கண்களாகுமா? கண்ணை மலர விழித்துக் காணும் பேறுடையோம்’யானும் பிற தோழிமாரும்,

மைதவழ் வெற்பன் மண அணி காணுமல் கையாற் புதைபெறும் கண்களும் கண்களோ?

|கருமேகம் தவழ்கின்ற மலேயை உடையவனது திரு மன அலங்காரத்தைக் காணுமல், நாணம் காரணமாகக் கைகளால் பொத்தப்பெறும் கண்களும் கண்களாகுமா?

மை-மேகம். புதைபெறும்-மூடப்பெறும்.)

தலைவி நாணத்தால் தலைவனை மணக்கோலத்தில் காணக் கூசுவாள் என்பதை நினைந்தே தோழி இப்படிக் கூறினுள். அவள் தன்னையே குறிப்பிடுகிருள் என்பதைத் தலைவி தெரிந்துகொண்டாள். ஆகவே, அவளுக்கு ஏற்ற விடை கூறவேண்டுமென்று நினைந்தாள். கூறுகிருள்

தலைவி : நானும் நீயும் வேற்றுமையில்லாமல் இருக்கி ருேம். என் உள்ளத்தை நீ அறிவாய், ஆகவே; நீ காண்பதும் நான் காண்பதும் ஒன்று தான். மணவனி காணுமல் மூடப்பெறும் கண்களும் கண்களோ என்று சொல்கிருயே! ஏன் அவ்வாறு சொல்கிருய்? நான் நின் கண்ணுல் மிகுதியாகக் காண்பேன். நான் தனி யாகக் காண வேண்டும் என்பது இல்லையே!