பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பிடியும் களிறும்

என்னைமண்? கின்கண்ணுற் காண்பென்மன் யான்.

(ஏன் இப்படிக்சொல்கிருய்? உன் கண்களையே என் கண்களாகக் கொண்டு நின் கண்களால் மிகவும் யான் கண்டு மகிழ்வேன்.

என்னை-ஏன். மன்: அசை. காண்பென்-கானுவேன். மன்: மிகுதியைக் குறித்தது.1

தோழி : அப்படியா! உன் அழகிய கண்களைக் கண்டு கண்டு நாங்களெல்லாம் வியந்து பாராட்டுகிருேம். பிறர் பார்த்துப் பொருமை கொள்ளும் வண்ணம் அழகு பொங்குவன உன் கண்கள்; மையுண்ட அக் கண்கள் நெய்தல் இதழைப் போல இருக்கின்றன. நீ என் கண்ணுல் காண்பதாகச் சொன்னாய் அல்லவா? அப்படியானல் என் கண்கள் நின் அழகிய கண்களா கட்டும். நான் இதை மிகுதியாக விரும்புகிறேன். . நெய்தல் இதழ்உண்கண் கின்கண்ஆ கென்கண்மன |நெய்தற் பூவின் இதழைப் போன்ற மையுண்ட கண் களாகிய நின் கண்களாக என் கண்கள் மிகவும் ஆகுக.

உண்கண்-மை உண்ட கண்கள். ஆக என்கண் என்பன விகாரமாகி, ஆகென்கண் என நின்றன. மன.மன்ன; மிகுதியாக. .

தன் கண்ணைத் தோழி புகழவே தலைவி நாண மிகுதி யால் தலையைச் சாய்த்து மேலே பேசாமல் மெளனமாக நின்ருள்.

- 穹

இவ்வாறு அவ்விருவரும் பேசிக்கொண்டிருந்ததை அங்கே வந்து மறைவில் நின்றிருந்த தலைவன் கவனித் தான். தோழி அறத்தொடு நின்றதையும் தலைவி