பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் பெருமான் 29

அழகும் தலையணையைப்போன்ற மென்மையும் உள்ள தோளையும் வண்டுகள் முரலும் கூந்தலையும் உடைய உமாதேவி வளருகின்ற தூக்கு என்னும் தாளவகையைத் தருவாளோ?

மண்டுதல் - நெருங்குதல். அமர் - போர். கடந்து - வென்று. மதுகை - வவிமை. பண்டரங்கம் - பாண்ட ரங்கக் கூத்து; பாட்டில் எதுகை நோக்கி முதல் எழுத்துக் குறுகி நின்றது. பனை - மூங்கில். அணை - படுக்கை, தலை யனே. அரற்றும் - ஒலிக்கும். தூக்கு - தளத்தின் இடைப் பகுதி.)

பாண்டரங்கம் என்ற கூத்தும் தெய்வங்களுக்குரிய பதிளுேராடல்களில் ஒன்று. இறைவன் திரிபுர சங்காரம் செய்த பிறகு பைரவியின் வேடம் பூண்டு, பூமியைத் தேராகக் கொண்டு நான்மறையைப் புரவியாகப் பூட்டி அவற்றை ஒட்டிய பிரமகிைய சாரதி காண வெண் னிற்றை அணிந்து ஆடியதென்று சிலப்பதிகாரம் கூறும்.

" தேர்முன் நின்ற திசைமுகன் காணப்

பாரதி ஆடிய வியன் பாண்ட ரங்கமும்.

(சிலப்பதிகாரம். 6:44-5.)

வானேராகிய தேரில் நான்மறைக் கடும்பரி பூட்டி நெடும்புறம் மறைத்து வார்துகில் முடித்துக் கூர்முட் பிடித்துத் தேர்முன் நின்ற திசைமுகன் காணும்படி பாரதி வடிவாய இறைவன் வெண்ணிற்றை அணிந்து ஆடிய

  • பாண்டரங்கம் முக்களுன் ஆடிற் றதற்குறுப்பு, ஆய்ந்தன ஆரும் _ எனல்’-சிலப்பதிகாரம், அடியார்க்கு நில்ல்ர்ர் காட்டிய மேற்கோள். இது தெய்வவிருத்தி என்ற கூத்து வகையுள் ஒன்று.